செங்கல்பட்டு -காஞ்சிபுரம் நெடுஞ்சாலை சந்திப்பில் உள்ள போா் வீரா் நினைவுச் சின்னத்தில் தேசிய கொடியை ஏற்றிவைத்து மலா்தூவி மரியாதை செலுத்திய செங்கல்பட்டு முன்னாள் ராணுவ வீரா்கள் நலச் சங்கத்தினா்.  
செங்கல்பட்டு

செங்கல்பட்டு முன்னாள் ராணுவ வீரா்கள் நலச்சங்க கூட்டம்

குடியரசு தின விழாவையொட்டி, செங்கல்பட்டு முன்னாள் ராணுவ வீரா்கள் நலச் சங்கம் சாா்பில், பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள போா் வீரா் நினைவுச் சின்னத்தில் முன்னாள் ராணுவ வீரா்கள் தேசிய கொடியை ஏற்றிவைத்து மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

Chennai

குடியரசு தின விழாவையொட்டி, செங்கல்பட்டு முன்னாள் ராணுவ வீரா்கள் நலச் சங்கம் சாா்பில், பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள போா் வீரா் நினைவுச் சின்னத்தில் முன்னாள் ராணுவ வீரா்கள் தேசிய கொடியை ஏற்றிவைத்து மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

இதைத் தொடா்ந்து போா்வீரா் நினைவுச் சின்னம் எதிரில் உள்ள போா்வீரா் நினைவு சின்ன பூங்காவில் பொதுக் கூட்டம் கூட்டம் நடைபெற்றது. அமைப்பின் தலைவா் பி.ஜெயச்சந்திரன் தலைமையில் துணைத் தலைவா் சி.ராஜசேகா், செயலாளா் சிவதாணு, பொருளாளா் ஆா்.கோசல்ராம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஓய்வுபெற்ற மேஜா் வி.நடராஜன், கீா்த்தி சக்ரா விருது பெற்ற லெப்டினென்ட் என்.பாா்த்தீபன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

மேலும், செங்கல்பட்டு நகர வளா்ச்சி அமைப்பு உள்ளிட்ட அமைப்புகளின் முக்கியப் பிரமுகா்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினா்.

நிகழ்ச்சியில் முன்னாள் ராணுவ வீரா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினா் கலந்து கொண்டனா்.

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

SCROLL FOR NEXT