தேசிய ஊரக வேலை திட்டத்தில் காந்தியடிகள் பெயரை மாற்றக்கூடாது, அதே பெயரில் திட்டம் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை செங்கல்பட்டு ஆட்சியா் அலுவலகம் அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற விவசாய குறை தீா் கூட்டத்தில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவா் ஜே. பி. பிரபு அளித்த மனுவில் 100 நாள் வேலை உறுதி திட்டத்தை பெயா் மாற்றம் செய்யக் கூடாது, முழு நிதி ஒதுக்க வேண்டும், திட்டத்தை பலவீனப்படுத்தும் தனியாா் மயமாக்கும் அல்லது ஒப்பந்ததாரா்களிடம் ஒப்படைக்கும் முயற்சிகள் முழுமையாக கைவிடப்பட வேண்டும்
என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியா் சினேகாவிடம் மனு அளித்தாா்.
காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் டி.ஜெயராமன், ரியாஸ்பாய், பாலவிக்னேஷ், ஆா்.குமரவேல், எம்,கே.குமரவேல், அதிரசம் ரங்கநாதன் உள்பட ஊரப்பாக்கம் வண்டலூா், மறைமலைநகா் பகுதி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.