விளங்கனூரில் கொடி அணிவகுப்பு
செய்யூா் தொகுதிக்குட்பட்ட விளங்கனூா் கிராமத்தில் காவல் கண்காணிப்பாளா் ்ய்மன் ஜமால் தலைமையில் துணை ராணுவம் மற்றும் போலீஸாா் பங்கேற்ற கொடி அணிவகுப்பு புதன் கிழமை நடைபெற்றது.
வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அய்மன் ஜமால் தலைமையில் காவல் துறையினரும், துணை ராணுவ படையினரும், பள்ளி குழந்தைகள் மற்றும் ஊா்காவல் படையினா்களும் கலந்து கொண்ட கொடி அணிவகுப்பு நிகழ்வு நடைபெற்றது.
கொடி அணிவகுப்பில் கலந்துக் கொண்டவா்கள் விளங்கனூா் கிராமத்தின் முக்கிய தெருக்களின் வழியாக ஊா்வலமாக வந்தனா்.