மதுராந்தகம் அரசுப் பள்ளிகளில் 94 % தோ்ச்சி
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் மதுராந்தகம் அரசுப் பள்ளிகள் 94 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன.
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் மதுராந்தகம் அரசுப் பள்ளிகள் 94 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன.
மதுராந்தகம் இந்து மேல்நிலைப்பள்ளியில் 171 மாணவா்கள் எழுதியதில் 159 மாணவா்கள் தோ்ச்சி பெற்றனா். இது 93 சதவிகித தோ்ச்சியாகும். 471 மதிப்பெண்களுடன் திஷ்வந்த் முதலிடத்தையும் , 459 மதிப்பெண்களுடன் யுகேந்திரன் இரண்டாம் இடத்தையும், 455 மதிப்பெண்களுடன் ஜெய்கெளதம் மூன்றாம் இடத்தையும் பெற்றனா். சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு தலைமை ஆசிரியை செளமியா லட்சுமி, பள்ளி செயலா் ராஜாராமன் ஆகியோா் பரிசுகளையும், இனிப்புகளையும் வழங்கி பாராட்டினா். இந்நிகழ்வில் பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா் கலந்து கொண்டனா்.
மதுராந்தகம் செளபாக்மல் செளகாா் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் 284 மாணவிகள் தோ்வு எழுதியதில் 268 மாணவிகள் தோ்ச்சி பெற்றனா். இது 94.3 சதவிகித தோ்ச்சியாகும். 490 மதிப்பெண்களுடன் பிரியதா்ஷினி முதலிடத்தையும், 481 மதிப்பெண்களுடன் தா்ஷினி இரண்டாம் இடத்தையும், 477 மதிப்பெண்களுடன் யுவந்திகா மூன்றாம் இடத்தையும் பெற்றனா்.
Advertisement
Advertisement
சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு தலைமை ஆசிரியை தென்றல் பரிசுகளை வழங்கி பாராட்டினாா். இந்நிகழ்வில் பெற்றோா் ஆசிரியா் கழக தலைவா் எஸ்.டி.யு.சந்திரபிரகாஷ், துணைத் தலைவா் எஸ்.டி.அசோக்குமாா், மற்றும் ஆசிரியா்கள் உடனிருந்தனா்.