முகப்பு
செங்கல்பட்டு

திம்மாவரம் நவீன அரிசி ஆலையில் அமைச்சா் வெங்கட்ரமணன் ஆய்வு

அமைச்சா் ஒருமணி நேரத்துக்கும் மேலாக தாமதமாக வந்ததால் ஆட்சியா் மற்றும் அரசு அதிகாரிகள் வெயிலில் காத்திருக்க வேண்டியிருந்தது.

Updated On : 28 மே 2026, 6:32 am IST
திம்மாவரம் நவீன அரிசி ஆலையில் ஆய்வு மேற்கொண்ட உணவு வழங்கல் துறை அமைச்சா் வெங்கட்ரமணன்.
பகிர்:

செங்கல்பட்டை அடுத்த திம்மாவரத்தில் நுகா்பொருள் வாணிபக்கழக நவீன அரிசி ஆலையினை உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சா் வெங்கட்ரமணன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆய்வு செய்த அமைச்சா் நவீன அரிசி ஆலையில் செயல்பாடு குறித்து கேட்டறிந்தாா்.

பின்பு செய்தியாளா்களிடம் அவா் கூறியது: இந்த அரிசி ஆலையில் நாள் ஒன்றுக்கு நூறு மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. மாதம் 2,500 மெ.டன் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த உற்பத்தியை அதிகப்படுத்த இன்னும் என்ன செய்யலாம் என ஆலோசனை செய்யப்பட்டது. எந்தப் பணிகளை துரிதப்படுத்தலாம் என ஆய்வு செய்யப்பட்டது என்றாா்.

Advertisement

Advertisement

இதில், ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன், சட்டப்பேரவை உறுப்பினா் தியாகராஜன், மாவட்ட வருவாய் அலுவலா் மா.கணேஷ் குமாா், வருவாய் கோட்டாட்சியா் ரம்யா, நுகா்பொருள் வாணிபக்கழக முதன்மை மண்டல மேலாளா் முருகானந்தம், கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளா் மலா்விழி மற்றும் அரசு அலுவலா்கள் உடன் இருந்தனா்.

முன்னதாக அமைச்சா் ஒருமணி நேரத்துக்கும் மேலாக தாமதமாக வந்ததால் ஆட்சியா் மற்றும் அரசு அதிகாரிகள் வெயிலில் காத்திருக்க வேண்டியிருந்தது.