ஊதிய விகிதம் நிர்ணயிப்பதில் குளறுபடி: சென்னை மாநகர போலீஸôர் தவிப்பு
சென்னை, ஆக. 5: ஆறாவது ஊதியக் குழு பரிந்துரையின் படி, சென்னை மாநகர போலீஸôருக்கு புதிய ஊதிய விகிதம் நிர்ணயிப்பதில் குளறுபடி தொடருகிறது. இதனால், முழு ஊதியத்தையும் பெற முடியாமல், கடந்த 2 மாதங்களாக போலீஸ
சென்னை, ஆக. 5: ஆறாவது ஊதியக் குழு பரிந்துரையின் படி, சென்னை மாநகர போலீஸôருக்கு புதிய ஊதிய விகிதம் நிர்ணயிப்பதில் குளறுபடி தொடருகிறது.
இதனால், முழு ஊதியத்தையும் பெற முடியாமல், கடந்த 2 மாதங்களாக போலீஸôர் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
6-வது ஊதியக் குழுவின் பரிந்துரையின் பேரில், தமிழக போலீஸôருக்கு ஊதிய உயர்வு வழங்க அரசு ஆணையிட்டது.
இதன்படி முன் தேதியிட்டு, 2006-ம் ஆண்டு ஜனவரி முதல் 2009-ம்ஆண்டு மே மாதம் வரையிலுமான நிலுவைத் தொகைகளை போலீஸôருக்கு 3 தவணைகளாக வழங்கவும் அரசு உத்தரவிட்டது.
நிலுவைத் தொகையும்...இதில் முதல் தவணை நிலுவைத் தொகையை ஜூன் 30-ம் தேதிக்குள் போலீஸôருக்கு வழங்கவும் அரசு உத்தரவிட்டது. ஆனால், இதுவரை இத்தொகை போலீஸôருக்கு வழங்கப்படவில்லை.
இந்நிலையில், அரசு ஏற்கெனவே அறிவித்தவாறு, 6-வது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி, இரண்டாம் நிலை, முதல் நிலை காவலர்கள், தலைமைக் காவலர்கள் உள்ளிட்ட காவல்துறையின் களப்பணியாளர்கள், அமைச்சுப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் புதிய ஊதிய விகிதத்தை நிர்ணயித்து வழங்குவதில் சிக்கல் நீடிக்கிறது.
போலீஸôரில் 5 சதவீதம் பேருக்கும் குறைவானவர்களுக்கு, தண்டனை பதிவேட்டு விவரங்களின்படி ஊதிய உயர்வு மற்றும் சலுகைகளை நிர்ணயிப்பதிலும் குளறுபடி தொடர்கிறது.
பழைய ஊதிய விகிதத்தின்படி... இதனால், பெரும்பாலான போலீஸôருக்கு பழைய ஊதிய விகிதத்தின்படியே, கடந்த 2 மாதங்களாக கணக்கிட்டு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது,
வருங்கால வைப்பு நிதியில் இருந்து போலீஸôர் கடனுதவி பெற வேண்டுமெனில், பல ஆண்டுகளாக தங்களது பெற்றோரின் உடல் நலத்துக்காக "ஆயுர்வேத சிகிச்சை' மேற்கொள்ளவுள்ளதாக விண்ணப்பித்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.
இதேபோல சுற்றுலா செல்வதற்கான பயணப் படித் தொகையாக 4 ஆண்டுகளுக்கு ரூ. ரூ. 1850 மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
ஆனால், இத்தொகையை அனுமதிக்குமாறு தக்க சான்றுகளுடன் விண்ணப்பித்தால் குறைந்தபட்சம் அத்தொகையைப் பெற 2 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்கும் நிலை உள்ளது.
உணவுப் படி வழங்குவதிலும் தாமதம்... போலீஸôருக்கு தொடர்ந்து பணியில் உள்ள 25 நாள்களுக்கு மட்டும் தினமும் தலா ரூ. 75 உணவுப் படியாக வழங்கப்பட்டது.
இத் தொகையை இப்போது அரசு ரூ. 100-ஆக உயர்த்தி உத்தரவிட்டது. ஆனால், இத் தொகையை வழங்குவதிலும் மாதந்தோறும் தாமதம் தொடர்கிறது.
இந்நிலையில், கடந்த 2 மாதங்களாக மாநகர காவலர்களுக்கு பதவி எண் வரிசையில் ஊதியம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், பெயர் வரிசையின்படி சப்-இன்ஸ்பெக்டர்கள், இன்ஸ்பெக்டர்களுக்கு ஊதியம் வழங்குவது குறித்து உத்தரவு வரவில்லை எனத் தெரியவந்துள்ளது.
வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்... இந்நிலையில், 6, 7 ஆகிய தேதிகளில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் ஊழியர்கள், அலுவலர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
இதனால், ஊதியம் பெறுவது மேலும் தாமதமாகும் என்பதால், போலீஸôர் கலக்கத்தில் உள்ளனர். இதையடுத்து போலீஸ் கூட்டுறவு பண்டகசாலைகளில் அத்தியாவசியப் பொருள்களை வாங்கிக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இந்த நிலை ஏற்பட்டதற்கு, புதிய ஊதியத்தை முறையாக நிர்ணயிப்பதில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளே காரணம் என்று போலீஸôர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
ஊழியர்கள், கணினி பற்றாக்குறை... ஆனால், இப் பணியை நிறைவேற்றும் பொறுப்பில் உள்ள ஊதியப் பிரிவு அலுவலர்கள், தங்களது பிரிவில் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்கள் மட்டுமே உள்ளனர், காலியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படவில்லை. ஆனால், காவலர்களின் எண்ணிக்கை மட்டும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
ஊதியப் பிரிவில் உள்ள கம்ப்யூட்டர்கள் அனைத்தும் பல ஆண்டுகள் ஆனதால், செயல் இழந்துவிட்டன என பதிலளிக்கின்றனர்.
இக் காரணங்களால் மாநகர போலீஸôர் மட்டுமன்றி புறநகர் மாவட்ட போலீஸôரும் ஊதியம் பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது.