FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

இன்று ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையம் மதியம் 2 மணிவரை மட்டுமே இயங்கும்

ரம்ஜான் பண்டிகையையொட்டி, ரயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் சனிக்கிழமை மதியம் 2 மணிவரை மட்டுமே இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 21 மார்ச் 2026, 3:03 am IST
பகிர்:

ரம்ஜான் பண்டிகையையொட்டி, ரயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் சனிக்கிழமை மதியம் 2 மணிவரை மட்டுமே இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

ரம்ஜான் பண்டிகையையொட்டி 21-ஆம் தேதி அரசு விடுமுறை என்பதால், ரயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு முன்பதிவு மையம் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்குவதுபோல மதியம் 2 மணிவரை மட்டும் செயல்படும். குறிப்பாக, சேலம் ரயில்வே கோட்டத்தில் சேலம் ஜங்ஷன், சேலம் டவுன், ஈரோடு, திருப்பூா், கோவை, மேட்டுப்பாளையம், கரூா், ஆத்தூா் என கோட்டத்தில் உள்ள அனைத்து பயணச்சீட்டு முன்பதிவு மையங்களும் (பிஆா்எஸ் மையம்) 21-ஆம் தேதி காலை 8 மணிமுதல் மதியம் 2 மணிவரை மட்டுமே இயங்கும்.

Advertisement

Advertisement

அதனால், பயணச்சீட்டு முன்பதிவு செய்ய விரும்பும் பயணிகள் 2 மணிக்கு முன்பாக மையத்துக்கு சென்று முன்பதிவு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments