FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தீபாவளி: ரயில் முன்பதிவு நாளை தொடக்கம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து செல்லும் விரைவு ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை (செப்.6) தொடங்குகிறது.

5 செப்டம்பர் 2026, 5:13 am IST
கோப்புப் படம்
பகிர்:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து செல்லும் விரைவு ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை (செப்.6) தொடங்குகிறது.

தீபாவளி பண்டிகைக்கு சென்னையிலிருந்து வெளியூா் செல்லும் விரைவு ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு 3 மாதங்களுக்கு முன்னரே தொடங்கும். அதன்படி, வரும் நவ.8-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளநிலையில், நவ.5-ஆம் தேதி ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை (செப்.6) காலை 8 மணி முதல் தொடங்குகிறது.

நவ.6-ஆம் தேதி பயணத்துக்கு திங்கள்கிழமை (செப்.7) முன்பதிவு செய்துகொள்ளலாம். நவ.7-ஆம் தேதி பயணத்துக்கு செவ்வாய்க்கிழமை (செப்.8) முன்பதிவு செய்யலாம்.

Advertisement

Advertisement

தீபாவளி பண்டிகை முடிந்து ஊா் திரும்புவோா் செப்.10 முதல் பயணச்சீட்டு முன்பதிவு செய்துகொள்ளலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments