முகப்பு
சென்னை

பஸ் நிலையத்துக்குள் வராமல் செல்லும் மாநகர பஸ்கள்: பயணிகள் அவதி

பொன்னேரி, மார்ச் 5: பொன்னேரி பஸ் நிலையத்தின் உள்ளே சில மாநகர பஸ்கள் வராமல் செல்வதால் பஸ் நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். பொன்னேரி தேரடி வீதியில் புதிய பஸ் நிலையம் அமைந்துள்

Updated On : 20 செப்டம்பர், 2012 at 6:06 AM
பகிர்:

பொன்னேரி, மார்ச் 5: பொன்னேரி பஸ் நிலையத்தின் உள்ளே சில மாநகர பஸ்கள் வராமல் செல்வதால் பஸ் நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

பொன்னேரி தேரடி வீதியில் புதிய பஸ் நிலையம் அமைந்துள்ளது. சென்னை-கும்மிடிபூண்டி மார்கத்தில் உள்ள பொன்னேரியில் ரயில் நிலையம் அமைந்திருந்த போதிலும் கோயம்பேடு, செங்குன்றம், தாம்பரம், வடபழநி, கொளத்தூர், அண்ணாநகர் உள்ளிட்ட தென்சென்னை பகுதிகளுக்கு செல்லும் மக்கள் பஸ் பயணம்தான் சென்று வர வேண்டும்.

 உதாரணத்திற்கு பொன்னேரியில் இருந்து கோயம்மேடு பஸ் நிலையத்துக்கு ரயில் மூலம் செல்ல வேண்டுமானால் ரயிலில் 2 மணி நேர பயணமும் அங்கிருந்து மாநகர பஸ்ஸில் 45நிமிட பயணம் செய்து கோயம்பேடு செல்ல வேண்டும்.

Advertisement

 அதே நேரத்தில் பொன்னேரியில் இருந்து கோயம்பேடுக்கு பஸ்ஸில் 1 மணி நேரத்திற்குள் சென்று விடலாம்.

 இதனால் பொன்னேரி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் அதிகம் பேர் பஸ் பயணத்தை விரும்புவர். பொன்னேரியில் அமைந்துள்ள விழுப்புரம் கோட்ட போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து சென்னை, செங்குன்றம், பழவேற்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு 50-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

 அதேபோன்று மாதவரம், வள்ளலார் நகர், ஆவடி, பட்டாபிராம், தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பொன்னேரி, மீஞ்சூர், பழவேற்காடு பகுதிகளுக்கு 20-க்கும் மேற்பட்ட மாநகர பஸ்கள் இயக்கப்படுகிறது.

 பொன்னேரியில் இருந்து இயக்கப்படும் விழுப்புரம் கோட்ட போக்குவரத்து கழக பஸ்கள் அனைத்தும் பஸ் நிலையத்தின் உள்ளே வந்து நின்று பயணிகளை ஏற்றி செல்கின்றன. ஆனால் சில மாநகர பஸ்கள் பஸ் நிலையத்தின் உள்ளே வராமல் சாலையிலேயே நின்று செல்வதால் பஸ் நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். ÷அத்துடன் இரவு நேரத்தில் பழவேற்காட்டில் இருந்து செங்குன்றம், வள்ளலார் நகர் பகுதிக்குக் கடைசி நேர பஸ்ஸôக இயக்கப்படும் சில மாநகர பஸ்கள் பஸ் நிலையத்துக்குள் வராமல் செல்வதாகவும் பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

 ÷எனவே பொன்னேரி பகுதிக்கு வந்து செல்லும் அனைத்து மாநகர பஸ்களும் பஸ் நிலையத்தின் உள்ளே வந்து செல்லவும், பஸ்கள் வந்து செல்லும் நேரம் குறித்து அறிவிக்க பஸ் நிலையத்தின் உள்ளே மாநகர போக்குவரத்து கழகத்தின் நேரக்காப்பாளர் அலுவலகத்தையும் திறக்க சென்னை மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.