முகப்பு
சென்னை

"4,000 மருத்துவ அலுவலர்கள் 3 மாதங்களுக்குள் நியமனம்'

அரசு மருத்துவமனைகளில் 4 ஆயிரம் பல்நோக்கு மருத்துவ அலுவலர்கள் மற்றும் 2 ஆயிரம் பாதுகாப்பு ஊழியர்களை 3 மாதங்களுக்குள் நியமிக்க உள்ளதாக சுகாதாரத் துறை செயலர் ஜே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:55 AM
பகிர்:

அரசு மருத்துவமனைகளில் 4 ஆயிரம் பல்நோக்கு மருத்துவ அலுவலர்கள் மற்றும் 2 ஆயிரம் பாதுகாப்பு ஊழியர்களை 3 மாதங்களுக்குள் நியமிக்க உள்ளதாக சுகாதாரத் துறை செயலர் ஜே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கடந்த சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் 110 விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதா பேசுகையில், அரசு மருத்துவமனைகளில் மருத்துவ அலுவலர்கள் மற்றும் பாதுகாப்பு ஊழியர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளதாக அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் 3 மாதங்களுக்குள் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாக சுகாதாரத் துறை செயலர் இப்போது தெரிவித்துள்ளார்.

அப்போலோ மருத்துவமனை சார்பில் நோய்த் தொற்று கட்டுப்பாடு குறித்த 2 நாள் சர்வதேச கருத்தரங்கம் சென்னையில் சனிக்கிழமை (ஜனவரி 5) தொடங்கியது. கருத்தரங்கத் தொடக்க விழாவில் கலந்து கொண்ட ஜே.ராதாகிருஷ்ணன் பேசியது:

அரசு மருத்துவமனைகளில் இதுவரை சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எலிகள் பிடிக்கப்பட்டுள்ளன. ரூ.90 கோடி செலவில் அரசு மருத்துவமனைகளில் கழிவுநீர் வெளியேற்றும் வசதிகளும், தண்ணீர் வசதிகளும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றார் அவர்.

கருத்தரங்கில் அப்போலோ மருத்துவமனைக் குழுமங்களின் தலைவர் டாக்டர் பிரதாப் சி. ரெட்டி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சாந்தாராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →