முகப்பு
சென்னை

நுரையீரல் அடைப்பு நோய்: ஒட்டுமொத்த சிகிச்சைகள் குறைவு

பல்வேறு உறுப்புகளைப் பாதிக்கும் பிறவிக் குறைபாடான நுரையீரல் அடைப்பு நோய்க்கு ஒட்டுமொத்த சிகிச்சைகள் வழங்கும் மருத்துவமனைகள் மிகவும் குறைவாக உள்ளன என காஞ்சி காமகோடி குழந்தைகள் அறக்கட்டளை மருத்துவமனையின் குழந்தைகள் நுரையீரல் சிகிச்சை நிபுணர் டாக்டர் சிவபாலன் கூறினார்.

Updated On : 2 ஆகஸ்ட் 2014, 3:04 am IST
பகிர்:

பல்வேறு உறுப்புகளைப் பாதிக்கும் பிறவிக் குறைபாடான நுரையீரல் அடைப்பு நோய்க்கு ஒட்டுமொத்த சிகிச்சைகள் வழங்கும் மருத்துவமனைகள் மிகவும் குறைவாக உள்ளன என காஞ்சி காமகோடி குழந்தைகள் அறக்கட்டளை மருத்துவமனையின் குழந்தைகள் நுரையீரல் சிகிச்சை நிபுணர் டாக்டர் சிவபாலன் கூறினார்.

அந்த மருத்துவமனை சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நுரையீரல் அடைப்பு நோய் குறித்த கருத்தரங்கில் டாக்டர் சிவபாலன் பேசியதாவது:

நுரையீரல் அடைப்பு நோய் என்பது ஒரு பிறவிக் குறைபாடாகும். நுரையீரலில் உள்ள குளோரைடு எனும் திரவப்பொருள் இறுகி திடப்பொருளாக மாறிவிடும். இதனால் நுரையீரலில் அடைப்பு ஏற்படும். நுரையீரல் மட்டுமின்றி ஒவ்வொரு உறுப்பாக பாதிக்கத் தொடங்கும்.

Advertisement

சளி, காய்ச்சல், ஆஸ்துமா, சுவாசக் கோளாறு, அடிக்கடி வயிற்றுப்போக்கு, உடல் எடை குறைதல், நிமோனியா எனப் பல்வேறு அறிகுறிகள் காணப்படும். பொதுவாக குழந்தைகள் பிறந்த ஆறு முதல் எட்டு மாதத்துக்குள் இந்த நோயைக் கண்டுபிடித்துவிட்டால், சிகிச்சையளிப்பது எளிதாகும்.

இந்த நோயைக் கண்டுபிடிப்பதற்கு வியர்வைப் பரிசோதனை மேற்கொள்வதுதான் மிகச் சரியான முறையாகும். வியர்வையில் அதிகப்படியான உப்பு இருந்தால் அந்த நபருக்கு நுரையீரல் அடைப்பு நோய் ஏற்பட்டிருக்கலாம்.

2,500 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு இந்தப் பாதிப்பு ஏற்படலாம். இந்தியாவில் இந்த நோய்க்கான பாதிப்பு குறைவாக உள்ளது என்று கருதப்படுகிறது. இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த சரியான புள்ளிவிவரங்கள் இல்லை. மேலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கணையத்துக்கான சிகிச்சை, இயன்முறை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த சிகிச்சைகள் தேவைப்படும். இந்த நோய்க்கான அனைத்து சிகிச்சைகளும் ஒரே இடத்தில் கிடைப்பதில்லை என்று அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.