தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை இடத்துக்கு ஜூலை 3 ஆம் தேதி இடைத்தேர்தல்
தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வரும் ஜூலை 3 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவை இடைத்தேர்தலுக்கான
தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வரும் ஜூலை 3 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவை இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 16 ஆம் தேதி தொடங்குகிறது.
வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய ஜூன் 23 ஆம் தேதி இறுதி நாள் என்றும், வேட்பு மனுக்களை திரும்பப்பெற ஜூன் 26 ஆம் தேதி கடைசி நாள் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் வேட்பு மனு பரிசீலனை ஜூன் 24 ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ஊழல் வழக்கில் நீதிமன்றத்தால் சிறை தண்டனை விதிக்கப்பட்ட திமுகவைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. செல்வகணபதி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் இடை தேர்தல் நடைபெறுகிறது.