சென்னை

இணையத்தில் ரத்த நன்கொடையாளர் விவரம் பதிவு

DIN

சென்னையை அடுத்த சேலையூர் பாரத் பல்கலைக்கழகத்தில் இணையதளத்தில் ரத்த நன்கொடையாளர்கள் விவரங்களை பதிவு செய்யும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
மாணவர்கள் மத்தியில் தன்னார்வ ரத்தம் நன்கொடை அளிப்பது குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் வகையில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு மையம், மாநில ரத்த சேகரிப்புக் குழுமம் சார்பில் மருத்துவர்கள், மாணவர்களிடம் ரத்தப் பரிசோதனைக்கான மாதிரிகள் எடுத்து ரத்தம் வகை குறித்து பதிவு செய்தனர். நிகழ்ச்சியில் 516 மாணவர்கள் தங்களை தன்னார்வ ரத்த நன்கொடையாளர்களாகப் பதிவு செய்தனர்.
தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு மைய திட்ட இயக்குநர் எஸ்.நடராஜன், உதவி இயக்குநர் கார்த்திக், மாவட்ட திட்ட அலுவலர் குமாரசாமி, பாரத் செஞ்சுருள் சங்க பொறுப்பாளர் பேராசிரியர் கே.பி.கலியமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கேஜரிவால் ஒரு சிங்கம்; யாராலும் வளைக்க முடியாது’: மனைவி சுனிதா கேஜரிவால் பெருமிதம்

திருவாரூா் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு கண்டறியும் குழுவினா் சோதனை

படிப்புடன் கூடுதல் திறமைகளை வளா்த்துக்கொள்ள வேண்டும்: மாநில தகவல் ஆணையா்

ஏரி, குளங்களை தூா்வார நிதி ஒதுக்க வேண்டும்: மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

ஆட்டோ ஓட்டுநா் வெட்டிக் கொலை

SCROLL FOR NEXT