சென்னை

அமெரிக்க துணை தூதரகத்துக்கு பலத்த பாதுகாப்பு

DIN

சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்துக்கு வியாழக்கிழமை முதல் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல், தனது தலைநகராக ஜெருசலேமைக் கூறி வருகிறது. அதற்கு சர்வதேச நாடுகள் அங்கீகாரம் அளிக்கவில்லை. இந்நிலையில் இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீரிக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பை வெளியிட்டார். இதற்கு இஸ்லாமிய நாடுகள், அரபு நாடுகள் பலவும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.
தமிழகத்தில் உள்ள ஒருசில அமைப்புகளும் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இதனால் அந்த அமைப்புகள், சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்கு வாய்ப்பு இருப்பதாக காவல்துறைக்கு ரகசியத் தகவல் வந்தது.
அதையடுத்து அமெரிக்க துணை தூதரகத்தை சுற்றிலும் வழக்கமாக உள்ள காவல்துறை பாதுகாப்பை மேலும் பலப்படுத்தியுள்ளனர் காவல்துறை அதிகாரிகள். இப்பாதுகாப்பு பணிகள் நிலைமை சீராகும் வரை தொடரும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமந்தாவிடம் இத்தனை கார்களா?

பாலியல் புகாரில் சிக்கிய தேவகௌடா பேரன்! நாட்டைவிட்டு தப்பினார்

பாரதிதாசனின் 134-வது பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி

மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு: நிர்மலாதேவி குற்றவாளி

அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வேட்புமனு தாக்கல்

SCROLL FOR NEXT