சென்னை

நகைக்காக தாய் கொலை: மும்பையில் கைதான தஷ்வந்த் தப்பியோட்டம்

DIN

சென்னை அருகே குன்றத்தூரில் நகைக்காக தாயை கொன்ற வழக்கில், மும்பையில் கைது செய்யப்பட்ட இளைஞர் தஷ்வந்த் போலீஸாரிடமிருந்து வியாழக்கிழமை தப்பியோடி தலைமறைவானார்.
குன்றத்தூர் சம்பந்தன்நகர் ஸ்ரீராம் சாலைப் பகுதியைச் சேர்ந்த சேகர்-சரளா தம்பதியின் மகன் தஷ்வந்த். இக்குடும்பத்தினர், சில மாதங்களுக்கு முன்பு வரை போரூர் அருகே உள்ள மதனந்தபுரம் மாதா நகரில் வசித்து வந்தனர். 
அங்கு தஷ்வந்த் அதேப் பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஹாசினியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றார். இதையடுத்து சிறையில் இருந்த அவரை பெற்றோர் ஜாமீனில் மீட்டனர். பின்னர் சேகர் குடும்பத்தினர் குன்றத்தூருக்கு இடம் பெயர்ந்தனர்.
செப்டம்பரில் ஜாமீனில் வந்த தஷ்வந்த் அடிக்கடி பெற்றோரிடம் பணம் கேட்டு தொல்லைக் கொடுத்துள்ளார். இந்நிலையில், கடந்த 2-ம் தேதி தஷ்வந்த் தாய் சரளா கொலையுண்டு கிடந்தார். அவரது கழுத்தில் இருந்த 25 பவுன் தங்க நகைகள் காணவில்லை.
குன்றத்தூர் போலீஸார் விசாரணையில் இரும்புக் கம்பியால் தாயை தாக்கிக் கொன்றுவிட்டு நகைகளுடன் தஷ்வந்த் தலைமறைவானது தெரியவந்தது. தப்பியோடிய தஷ்வந்தை தனிப்படை போலீஸார் தேடினர். இந்நிலையில் மும்பை செம்பூர் ரேஸ்கோர்ஸில் இருந்த தஷ்வந்த் தனிப்படை போலீஸாரால் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டார். 
அவரை அங்குள்ள பாந்தரா நீதிமன்றத்தில் தனிப்படை போலீஸார் வியாழக்கிழமை ஆஜர்படுத்தி, சென்னை அழைத்து வருவதற்கு வாரண்ட் பெற்றனர். நீதிமன்றம் தஷ்வந்தை 9-ஆம் தேதிக்குள் ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து தஷ்வந்த் மும்பை விமான நிலையம் அருகே ஒரு ஹோட்டலுக்கு போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது தஷ்வந்த் கழிவறைக்குச் செல்வதாக நாடமாடி தப்பினார். இதையடுத்து சென்னை போலீஸார், மும்பை போலீஸார் உதவியுடன் தஷ்வந்தை தேடிப் பிடிக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT