சென்னை

வள்ளியம்மை பொறியியல் கல்லூரியில் தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம்

DIN

சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூர் வள்ளியம்மை பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் துறை சார்பில் தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் அண்மையில் நடைபெற்றது.
வஜேந்திரா மைக்ரோவேவ் நிறுவன நிர்வாக இயக்குநர் டி.சங்கரநாராயணன் முகாமை தொடங்கி வைத்து பேசியபோது, "சொந்தமாக தொழில் தொடங்க கிடைக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பயன்படுத்தி திறமைகளை மேம்படுத்திக் கொள்ளுங்கள். தன்னம்பிக்கை, விடாமுயற்சியுடன் போராடக் கற்றுக் கொள்ளுங்கள். தால்விகளைக் கண்டு பயந்து ஒதுங்கி விடாமல் தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளுங்கள்' என்றார்.
தொழில் தொடங்கத் தேவையான முதலீடு, வங்கி கடன், மத்திய, மாநில அரசுகள் வழங்கும் உதவிகள் குறித்து சிறு, குறுந்தொழில் பயிற்சி மையம் இயக்குநர் இ.பாஸ்கரன் விளக்கினார். ஸ்டார்ட் அப் சொல்யூஷன்ஸ் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சி.பி.ரோசி பர்ணான்டோ, தொழில் வாய்ப்புகள் குறித்த அறிவாற்றலை மேம்படுத்திக் கொள்வது குறித்து விவரித்தார்.
கல்லூரியின் கணினி அறிவியல் பொறியியல் துறைத் தலைவர் பி.வானதி, முகாம் ஒருங்கிணைப்பாளர்கள் ஜி.சங்கீதா, கே.சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

SCROLL FOR NEXT