சென்னை

7-ஆவது நாளாக தொடரும் சென்னை சில்க்ஸ் கட்டட இடிப்புப் பணி

தீ விபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்கும் பணிகள் தொடர்ந்து 7 - ஆவது நாளாக வியாழக்கிழமை நடைபெற்றது. காலை 7.30 மணியளவில் தொடங்க்கப்பட்ட பணிகள் இரவு 7 மணி வரை நடைபெற்றன.

DIN

தீ விபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்கும் பணிகள் தொடர்ந்து 7 - ஆவது நாளாக வியாழக்கிழமை நடைபெற்றது. காலை 7.30 மணியளவில் தொடங்க்கப்பட்ட பணிகள் இரவு 7 மணி வரை நடைபெற்றன.
கட்டடத்தின் பின்புற வலது பகுதி இதுவரை 90 சதவீதம் இடிக்கப்பட்டுள்ளது. கட்டடத்தின் தூண்கள், சுவர்களை நொறுக்கி கட்டடக் கழிவுகளாக மாற்றும் பணிகளை ஊழியர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். ஆபத்தான நிலையில் இருந்த குளிரூட்டி இயந்திர கூடம் பாதுகாப்புடன் இடிக்கப்பட்டுள்ளது.
தற்போது, இடிக்கப்பட்ட கட்டட கழிவுகள் அகற்றப்பட்டு வருகின்றன. அத்துடன் கட்டடத்தின் அருகிலுள்ள குடியிருப்புகள் மீது கட்டட கழிவுகள் விழாமல் இருக்க சாரம் அமைத்து பலகைகள் பொருத்தப்பட்டுள்ளன.
இடிப்புப் பணிகளை மேற்கொள்ளும் இயந்திரங்கள் சீரான இடைவெளியில் நிறுத்தப்பட்டு, கவனமாகவும், பொறுமையுடன் கட்டடம் இடிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து பாதுகாப்பு பணிகளில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்த 4 நாள்களுக்குள் கட்டடம் முழுமையாக இடிக்கப்பட்டு விடும் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் மகா கும்பாபிஷேகம்: ஆதீனங்கள், மடாதிபதிகள் பங்கேற்பு

தங்கம் விலை எவ்வளவு? இன்றைய நிலவரம்!

விடியற்காலையில் நிலவும் கடும் பனி மூட்டம்! வேலூரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

பழனி திருஆவினன்குடி கோயிலில் குடமுழுக்கு கோலாகலம்!

ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீ: 40 வீடுகள் எரிந்து நாசம், தீயணைப்பு வீரரும் பலி

SCROLL FOR NEXT