சென்னை

"தொழிற்சாலைகள் ஆன்லைன் மூலம் ஆய்வு செய்யப்படும்'

தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் சட்டங்கள் முறையாக பின்பற்றப்படுகின்றனவா என்பதை ஆன்லைன் மூலம் ஆய்வு செய்யும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என மத்திய தொழிலாளர் துணை ஆணையாளர்

DIN

தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் சட்டங்கள் முறையாக பின்பற்றப்படுகின்றனவா என்பதை ஆன்லைன் மூலம் ஆய்வு செய்யும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என மத்திய தொழிலாளர் துணை ஆணையாளர் ஸ்ரீனிவாஸ் தெரிவித்தார்.

தமிழ்நாடு, புதுச்சேரி மண்டல மத்திய தொழிலாளர் நலத் துறை சார்பில், மத்திய அரசின் மூன்றாண்டு சாதனைகளை விளக்கும் வகையில் தொழிற்சாலை நிர்வாகிகள், தொழிலாளர் சங்க பிரதிநிதிகளுடனான கூட்டம், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் மத்திய தொழிலாளர் துறை துணை ஆணையாளர் ஸ்ரீனிவாஸ் பேசியதாவது:
மத்திய அரசு கடந்த 3 ஆண்டுகளில் தொழிலாளர்கள் பயனடையும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
தொழிலாளர்களுக்கு இதுவரையில் 40 சட்டப் பிரிவுகள் வரையில் இருந்தன.
இவை ஊதியம் மற்றும் இதர சலுகைகள் என 4 வகைப் பிரிவுகளாக செயல்படுத்தப்பட உள்ளன.
தொழிற்சாலைதளில் தொழிலாளர் சட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றனவா என்பதை அதிகாரிகள் விருப்ப உரிமை அடிப்படையில் ஆய்வு செய்தனர்.
இனிமேல், மத்திய தொழிலாளர் நலத் துறை ஆணையாளர் அலுவலகத்திலிருந்து எங்கு ஆய்வு செய்ய வேண்டும் என்பது குறித்து ஆன்லைன் மூலம் அதிகாரிகளுக்கு தகவல் தரப்படும்.
அதன்படி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொழிற்சாலைகளில் நேரடியாக ஆய்வு செய்து, அதுதொடர்பான அறிக்கையை ஆன்லைன் மூலம் அனுப்பும் நடைமுறை செயல்படுத்தப்பட உள்ளது.
இதன் மூலம் அதிகாரிகள் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படும் நிலை உருவாகும் என்றார் அவர்.
இதில், மண்டல தொழிலாளர் ஆணையாளர்கள் ராஜேந்திரன் (மதுரை) மற்றும் சேகர் (சென்னை), ரவி (ஏ.ஐ.டி.யு.சி), சுப்பிரமணியபிள்ளை (எம்.எம்.எஸ்), விஜயன் (சி.ஐ.டி.யு) உள்பட பல்வேறு தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கன்னி ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

SCROLL FOR NEXT