சென்னை

கல்வி விழிப்புணர்வை வலியுறுத்தி மகளிர் சார்பில் கோவையிலிருந்து லண்டனுக்கு கார் பயணம்

DIN

கல்வி விழிப்புணர்வை வலியுறுத்தி, கோவையில் இருந்து லண்டன் வரை மகளிர் செல்லும் கார் பயணத்தை, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டெக்சிட்டி, ரோட்டரி ஆக்ருதி, ஸ்ரீராமகிருஷ்ணா கல்விக் குழுமங்களின் சார்பில் கல்வி விழிப்புணர்வு, 70-ஆவது சுதந்திர தினம், பெண்கள் ஆளுமைத் திறனை மையப்படுத்தி, மகளிர் சார்பில் இந்த கார் பயணம் தொடங்கியது.
கோவை எஸ்.என்.ஆர். கல்லூரி வளாகத்தில் இந்தப் பயணத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கொடியசைத்து தொடக்கிவைத்தார். கோவையைச் சேர்ந்த மீனாட்சி அரவிந்த் (45), மூகாம்பிகை ரத்தினம் (37), மும்பையைச் சேர்ந்த பிரியா ராஜ்பால் (52) ஆகியோர் இந்தப் பயணத்தை மேற்கொள்கின்றனர். இந்தப் பயணமானது, கோவையில் இருந்து 24 நாடுகள் வழியாக 24 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவை காரில் கடந்து லண்டனை ஜூன் 5-ஆம் தேதி அடைய உள்ளது. மேலும், வழிநெடுகிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க உள்ளனர்.
இதன் தொடக்க விழாவில், மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன், அவினாசிலிங்கம் பல்கலைக்கழக வேந்தர் பி.ஆர்.கிருஷ்ணகுமார், ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டெக்சிட்டி தலைவர் கே.பி.பிரிஜேஷ், ஆக்ருதி தலைவர் லீமாரோஸ் மார்ட்டின் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சியில் ராஜ்ஸ்ரீ சுகர்ஸ், கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜ்ஸ்ரீ பதிக்கு பெண் சாதனையாளர் விருதை அவினாசிலிங்கம் பல்கலைக்கழக வேந்தர் பி.ஆர்.கிருஷ்ணகுமார் வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

SCROLL FOR NEXT