சென்னை

தமிழைக் காக்க அனைவரும் வீதியில் இறங்கிப் போராட வேண்டும்: ராமதாஸ்

DIN

தமிழை காக்க தமிழறிஞர்கள், ஆசிரியர்கள், தமிழ் பயிலும் மாணவர்கள் என அனைவரும் வீதியில் இறங்கிப் போராட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில், தமிழைக் காக்க தமிழறிஞர்கள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் சென்னை தியாகராஜர் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தை தொடங்கி வைத்து ராமதாஸ் பேசியது: தமிழ் மொழியின் தொன்மையையும், சிறப்பையும் காப்பாற்ற வேண்டியது நம் ஒவ்
வொருவரின் தலையாயக் கடமை. தமிழ் மொழியைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும்.
மேலும் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வரும் தமிழ்மொழியை பாதுகாக்க உயர்கல்வி தமிழில் வழங்கப்பட வேண்டும். தமிழ் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். அடுத்தகட்டமாக உலகளாவிய தமிழர்கள் ஒன்றுகூடி ஒரு வட்டமேசை மாநாடு நடத்தி தீர்மானங்களை முன்மொழிந்து தமிழை பாதுகாக்க வேண்டும். தமிழ் எந்த இடத்திலும் இல்லை. தமிழ் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகிறது. யார் அழித்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரியும். இதை சொல்வதற்கு எனக்கு வேதனையாக உள்ளது என்றார் ராமதாஸ்.
முன்னாள் துணை வேந்தர் பொற்கோ: தமிழை பாதுகாக்க மொழிப்பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்றார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு ராமதாஸ் அளித்த பேட்டி: பிற மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்கள் அந்த மொழியை அவர்கள் படிப்பதற்கு ஏற்பாடுகள் செய்வதுடன் தமிழையும் கட்டாயம் படிக்க வைக்க வேண்டும்.
பயிற்று மொழி தாய்மொழியாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தமிழை பேசு என கூறுவது வேதனையளிக்கிறது. தமிழை காப்பதற்கு மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த திட்டம் என்றார்.
இந்தக் கலந்தாய்வுக் கூட்டத்தில் பேராசிரியர் மா.நன்னன், கவிஞர் காசி ஆனந்தன் உள்பட தமிழறிஞர் கள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராணுவ அதிகாரிப் பணிக்கான என்டிஏ தேர்வு: யுபிஎஸ்சி அறிவிப்பு

அமெரிக்க உளவு செயற்கைக் கோள்களை வானில் ஏவிய ஸ்பேஸ்எக்ஸ்!

அமெரிக்காவில் மேலும் ஒருவருக்கு பறவைக் காய்ச்சல்!

பாலஸ்தீனத்தில் தூதரகம்: கொலம்பியா அறிவிப்பு!

உங்கள் ராசி என்ன? இன்றைய தினப்பலன்!

SCROLL FOR NEXT