சென்னை

பாதுகாப்புத் துறையில் தனியார்மயம்: திட்டத்தை கைவிட கையெழுத்து இயக்கம்

DIN

தேசத்தின் நலன் கருதி பாதுகாப்புத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என அகில இந்திய பாதுகாப்புத் துறை ஊழியர்கள் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக இந்த சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கை:
தேசத்தின் நலன் கருதி பாதுகாப்புத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி, ஏப்ரல் 3 -ஆம் தேதி முதல் 27 - ஆம் தேதி வரை கையெழுத்து இயக்கம் நடத்தப்படும்.
மேலும் புதிய ஓய்வுதியத் திட்டத்தை கைவிட வேண்டும், 7 -ஆவது ஊதியக் குழு அடிப்படையில் குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிக்க வேண்டும், ஊழியர்களுக்கான படிகளை மாற்றியமைக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் ஜூலை மாதம் 3 -ஆம் தேதி, 4 லட்சம் ஊழியர்கள் நாடாளுமன்றம் முன் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என அதில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT