சென்னை

நெம்மேலியில் நாளை பராமரிப்பு பணி: லாரி மூலம் குடிநீர் பெற தொடர்பு கொள்ளலாம்

DIN

சென்னை அருகே நெம்மேலியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் புதன்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் லாரிகள் மூலம் குடிநீர் பெற துணை பகுதிப் பொறியாளர்கள் தொடர்பு கொள்ளலாம் என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
நெம்மேலியில் நாளொன்றுக்கு 10 கோடி லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி, அடையாறு, வேளச்சேரி, பெசன்ட் நகர், சோழிங்கநல்லூர், கிழக்கு கடற்கரைச் சாலை, நீலாங்கரை போன்ற பகுதிகளில் புதன்கிழமை (ஏப்.18) காலை 10 மணி முதல் வியாழக்கிழமை (ஏப்.19) காலை 10 மணி வரை குடிநீர் வழங்குவதில் தடங்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. 
இதனால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரைச் சேமித்து வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் அவசரத் தேவைக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக் கொள்ள கீழ்கண்ட துணைப் பகுதிப் பொறியாளர்களின் செல்லிடப்பேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என சென்னைக் குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
லாரிகள் மூலம் குடிநீர் பெற...
4 அடையாறு, வேளச்சேரி, பெசன்ட் நகர், திருவான்மியூர் - 8144930245
4 கொட்டிவாக்கம், பாலவாக்கம், 
பெருங்குடி- 8144930267
4 கிழக்கு கடற்கரைச் சாலை, நீலாங்கரை, சோழிங்கநல்லூர் - 8144930525

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தக் லைஃப்பில் பாலிவுட் பிரபலங்கள்!

குட்காவை பதுக்கி விற்பனை செய்த மளிகைக் கடைக்காரா் கைது

அமெரிக்கா யார் பக்கம்?

இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6 - 6.5% தான், 8 - 8.5% அல்ல! -ரகுராம் ராஜன்

7 நக்சல்கள் சுட்டுக் கொலை!

SCROLL FOR NEXT