சென்னை

பிரம்மா குமாரிகள் இயக்க தலைமை நிர்வாகி செப்.3-இல் சென்னை வருகை

DIN


பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் தலைமை நிர்வாகி ஜானகி (102) வரும் திங்கள்கிழமை (செப். 3) சென்னைக்கு வருகை தரவுள்ளார் என்று இயக்கத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நிர்வாகிகள் மீனா, கவிதா ஆகியோர் தெரிவித்தனர்.
இதுகுறித்து சென்னையில் நிருபர்களிடம் வெள்ளிக்கிழமை அவர்கள் கூறியது:
பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் 4,500 கிளைகள் உலகம் முழுவதும் உள்ளன. 147 நாடுகளில் சுமார் 15 லட்சம் உறுப்பினர்களை கொண்டு இயங்கும் இந்த இயக்கத்தின் தலைவி ஜானகி செப்டம்பர் 3-ஆம் தேதி சென்னைக்கு வருகை தருகிறார்.
காமராஜர் அரங்கில் உரை: அன்று மாலை 6 மணிக்கு சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஆசிர்வாத உரையை அவர் நிகழ்த்துகிறார். இந்நிகழ்ச்சியில் ராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த தலைமை நிர்வாகி சுவாமி கெளதமானந்தா, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நீதிபதிகள் எஸ்.விமலா, பி.சேஷசாயி, பி.ஜோதிமணி, பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர்.
செப். 4-இல் சுங்குவார்சத்திரத்தில்: செவ்வாய்க்கிழமை (செப்.4) சுங்குவார்சத்திரத்தில் உள்ள பிரம்மா குமாரிகளின் சிறப்பு பயிற்சி மையமான ஹேப்பி வில்லேஜில் 5 மாடிகளைக் கொண்ட ஏஞ்சல் ஹவுஸ் கட்டடத்துக்கான பூமி பூஜையில் தலைமை நிர்வாகி ஜானகி கலந்து கொள்கிறார்.
102 வயதாகும் அவரது சேவையைப் பாராட்டி உலகெங்கிலும் பல நாடுகளின் அரசுகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் பல விருதுகளையும், பட்டங்களையும் வழங்கி உள்ளன என பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நிர்வாகிகள் மீனா, கவிதா ஆகியோர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

SCROLL FOR NEXT