மென்பொருள் பொறியாளர்களிடம் வழிப்பறி: 6 பேர் கைது
சென்னை, துரைப்பாக்கம் பகுதியில் மென்பொருள் பொறியாளர்களை குறி வைத்து வழிப்பறி செய்த 6 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். துரைப்பாக்கம் அருகே உள்ள
சென்னைமென்பொருள் பொறியாளர்களிடம் வழிப்பறி: 6 பேர் கைது
சென்னை, துரைப்பாக்கம் பகுதியில் மென்பொருள் பொறியாளர்களை குறி வைத்து வழிப்பறி செய்த 6 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். துரைப்பாக்கம் அருகே உள்ள
சென்னை, துரைப்பாக்கம் பகுதியில் மென்பொருள் பொறியாளர்களை குறி வைத்து வழிப்பறி செய்த 6 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். துரைப்பாக்கம் அருகே உள்ள ஒக்கியம்பேட்டை திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் சந்தோஷ் (22). மென்பொருள் பொறியாளராக அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் சந்தோஷ், ஒக்கியம்பேட்டை ஈஸ்வரன் தெருவில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்து வந்தார். அப்போது அங்கு வந்த 6 பேர் திடீரென சந்தோஷிடம் கத்தியை காட்டி மிரட்டி, அவர் வைத்திருந்த பணம், செல்லிடப்பேசி ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பியோட முயன்றனர். இதையடுத்து சந்தோஷ் சத்தம் போட்டார். அப்போது அருகில் இருந்த சிலரும், அருகில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரும் தப்பியோட முயன்ற 6 பேரையும் சுற்றி வளைத்தனர்.
பிடிப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள், கண்ணகி நகரைச் சேர்ந்த ஆகாஷ் (20), ஜோன்ஸ் (22), மகேந்திரன் (22), நடராஜன் (20), பார்த்திபன் (21), காளிதாஸ் (20) என்பது தெரியவந்தது. இவர்கள் 6 பேரும் துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி, தரமணி உள்ளிட்ட பகுதிகளில் மென்பொருள் பொறியாளர்களை குறி வைத்து வழிப்பறி, திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிந்து 6 பேரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூவர் கைது: கொருக்குப்பேட்டை பெரியார் நகர் ரிக்ஷா காலனி தெருவைச் சேர்ந்தவர் கு.மணிகண்டன் (26). இவர், ஞாயிற்றுக்கிழமை கொருக்குப்பேட்டை, 2-ஆவது தெருவில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த சிலர், மணிகண்டனிடம் கத்தியை காட்டி மிரட்டி, பணம் பறிக்க முயன்றனர். இதைப் பார்த்த மணிகண்டன் சத்தம் போட்டார். அப்போது, அந்த வழியாக ரோந்து வந்த ஆர்.கே.நகர் போலீசார், வழிப்பறியில் ஈடுபட முயன்ற 3 பேரையும் மடக்கிப் பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் மூவரும், கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ.நகரை சேர்ந்த சுரேஷ் (22), விஜய் (எ) அப்பு (20), ஆர்.கே.நகர். 3 வது தெருவை சேர்ந்த சுரேஷ் (எ) சண்முகம் (25) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து இரு கத்திகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து மூவரும் கைது செய்யப்பட்டனர்.