முகப்பு
செய்திகள்

டாக்ஸிக் வெளியீட்டில் மாற்றம்!

டாக்ஸிக் வெளியீட்டுத் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது...

Updated On : 4 மார்ச், 2026 at 11:44 AM
நடிகர் யஷ்
பகிர்:
Updated On : 4 மார்ச், 2026 at 11:25 AM

நடிகர் யஷ்ஷின் டாக்ஸிக் வெளியீட்டுத் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் நடிகர்கள் யஷ், ருக்மணி வசந்த், நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் டாக்ஸிக் திரைப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தின் டீசர் தமிழ், கன்னடம், தெலுங்கு, உள்ளிட்ட பான் இந்திய மொழிகளில் வெளியாகி மிகப்பெரிய கவனத்தைப் பெற்றது.

Advertisement

Updated On : 4 மார்ச், 2026 at 11:36 AM

மேலும், அப்பா - மகன் (ஹீரோ, வில்லன்) என இரண்டு வேடங்களில் யஷ் நடித்துள்ளது உறுதியாகியுள்ளது. இது ரசிகர்களிடம் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

டாக்ஸிக் மார்ச் 19 ஆம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஈரான் உள்பட மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக ஜூன் 4 ஆம் தேதிக்கு வெளியீட்டை ஒத்திவைப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.