முகப்பு
செய்திகள்

ஹீரோ, வில்லன்... இரண்டு கதாபாத்திரங்களில் யஷ்!

டாக்ஸிக் டீசர் தோற்றங்கள் குறித்து...

Updated On : 21 பிப்ரவரி 2026, 3:09 pm IST
நடிகர் யஷ்
பகிர்:

நடிகர் யஷ்ஷின் டாக்ஸிக் டீசர் மிகப்பெரிய அளவில் கவனிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் நடிகர்கள் யஷ், ருக்மணி வசந்த், நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் டாக்ஸிக் திரைப்படம் உருவாகியுள்ளது.

இந்தப் படம் மார்ச் 19 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் டீசர் தமிழ், கன்னடம், தெலுங்கு, உள்ளிட்ட பான் இந்திய மொழிகளில் வெளியானது.

Advertisement

Advertisement

ஏற்கனவே, ராயா என்கிற யஷின் கதாபாத்திர கிளிம்ஸில் இடம்பெற்ற ஆக்சன் காட்சிகள் சமூக வலைதளங்களில் பேசுபொருளானாது.

தற்போது, இந்த டீசர் முழுக்க ரத்தக் காட்சிகளால் நிறைந்திருப்பதுடன் வன்முறையின் உச்சமாக சில தாக்குதல்களும் காட்டப்படுகின்றன. இதுவும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், டீசரின் இறுதிக்காட்சியில் இளவயது யஷ் கதாபாத்திரம் காட்டப்பட்டது. இது ராயாவின் பிளாஷ்பேக் காட்சியாக இருக்கலாம் என ஊகிக்கப்பட்ட நிலையில், இக்கதாபாத்திரத்தின் பெயர் டிக்கெட் என்று அறிவித்துள்ளனர். இதன் மூலம் அப்பா - மகன் (ஹீரோ, வில்லன்) என இரண்டு வேடங்களில் யஷ் நடித்துள்ளது உறுதியாகியுள்ளது. இது ரசிகர்களிடம் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.