ஹைதராபாத் விபத்தால் சென்னையில் டாக்ஸிக் நிகழ்வு ரத்து!
சென்னையில் நடைபெற இருந்த டாக்ஸிக் நிகழ்வு ரத்து...
நடிகர் யஷ்ஷின் டாக்ஸிக் திரைப்படத்தின் சென்னை நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் நடிகர் யஷ் நடித்துள்ள திரைப்படம் டாக்ஸிக். 1940-களில் கோவாவை மையமாகக் கொண்ட ஆக்ஷன் த்ரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. கேவிஎன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் ஆகஸ்ட் 26 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், டாக்ஸிக் திரைப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு ஹைதராபாத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் நேற்று (ஆகஸ்ட் 22) நடைபெற்றது. இதில் யஷ், கியாரா அத்வானி உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
Advertisement
Advertisement
இந்நிகழ்வில் யஷ் ரசிகர்களிடம் உரையாடினார். அப்போது, நிகழ்வில் பங்கேற்ற இளைஞர்கள் சிலர், உயரமான இடத்தில் அமைக்கப்பட்டிருந்த டிஜே ஸ்பீக்கரை தாங்கும் பலகைகள் கொண்ட கட்டுமானத்தின் மீது ஏறினர். அப்போது, ஸ்பீக்கருடன் ஒட்டுமொத்த கட்டுமானமும் கீழே சரிந்து விழுந்ததில் 4 பேர் காயமடைந்தனர்.
இதில், மாணவர் ஒருவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மற்ற மூவருக்கும் சிறிய காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக, அந்நிகழ்வை நடத்திய கல்வி நிறுவனத்தின் நிர்வாகம் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்தால் இன்று சென்னையில் நடைபெற இருந்த டாக்ஸிக் முன்வெளியீட்டு நிகழ்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், இன்று நடைபெற இருந்த நிகழ்ச்சி நாளை (ஆக. 24) நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மாலை 6 மணிக்கு நடைபெறும் எனத் தெரிவித்துள்ளனர்.
The Chennai event for actor Yash's film Toxic has been cancelled.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.