ரூ.8 லட்சம் மதிப்பில் வெளிநாட்டு கரன்சி பறிமுதல்: இருவர் கைது
சென்னையிலிருந்து இலங்கைக்கு விமானத்தில் கடத்திச் செல்ல முயன்ற ரூ.8 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சியை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.
சென்னைரூ.8 லட்சம் மதிப்பில் வெளிநாட்டு கரன்சி பறிமுதல்: இருவர் கைது
சென்னையிலிருந்து இலங்கைக்கு விமானத்தில் கடத்திச் செல்ல முயன்ற ரூ.8 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சியை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.
சென்னையிலிருந்து இலங்கைக்கு விமானத்தில் கடத்திச் செல்ல முயன்ற ரூ.8 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சியை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.
ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் ஷாகுல் ஹமீது (36). இவர் சென்னையிலிருந்து இலங்கைக்கு விமானம் மூலம் செல்ல விமான நிலையத்துக்கு வந்தார்.
அவரது பாஸ்போர்ட் (கடவுச் சீட்டு) உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்ப்பதற்காக சோதனையிட்ட போது, அவர் தனது உள்ளாடையில், 25 ஆயிரம் சவுதி ரியால் கரன்சி நோட்டுகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
அதேபோல், ராமநாதபுரத்தைச் சேர்ந்த சிக்கந்தர் பாதுஷாவும் (43) உள்ளாடையில் 25 ஆயிரம் சவுதி ரியால் கரன்சி நோட்டுகளை மறைத்து வைத்திருந்தார்.
இருவரும் கடத்திய கரன்சி நோட்டுகளின் மதிப்பு இந்திய மதிப்புக்கு ரூ.8 லட்சமாகும்.
சட்டவிரோதமாக இவர்கள் வெளிநாட்டு கரன்சி நோட்டுகளை கடத்தியதால் இருவரையும் சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.