சென்னை

போகி: முடங்கிய விமான சேவை

DIN

போகிப் புகை, அடர் பனிமூட்டத்தினால் சென்னையில் சனிக்கிழமை விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. சென்னைக்கு வந்த 12 விமானங்கள் திருப்பி விடப்பட்டன.
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள உள்ளுர் மற்றும் பன்னாட்டு விமான சேவை சனிக்கிழமை காலை பாதிக்கப்பட்டது. அப்பகுதியில் விமானங்கள் தரையிறங்க முடியாத அளவுக்கு புகையும், பனியும் சூழ்ந்திருந்தது. இதனால் விமான ஓடுபாதை முற்றிலும் தெரியாமல் போனது. இதன்காரணமாக அதிகாலை முதல் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக சென்னையில் விமானங்கள் தரையிறங்க அனுமதி வழங்கப்படவில்லை.
அதேபோல் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்களும் புறப்படவில்லை. லண்டனில் இருந்து சனிக்கிழமை அதிகாலையில் சென்னை வந்த விமானம் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டதால் ஐதராபாத் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது. மொத்தம் 12 விமானங்கள் திருப்பி விடப்பட்டன. சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய சுமார் 30 விமானங்கள் தாமதமாக சென்றதாக விமான நிலைய வட்டாரங்களில் தகவல் அளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப நோய்களுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

கோட் நாயகி மீனாட்சி செளத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT