சென்னை

எழுத்தாளரையும், வாசகரையும் இணைப்பது ஓவியம்

DIN

என் வாழ்க்கையில் புத்தகங்களின் பங்கு அளப்பரியது. என் சிறு வயது முதலே புத்தகங்கள் இல்லாத இடத்தில் நான் இருந்ததே இல்லை. குளோபல் ஆர்ட்டின் புத்தகத் தேடலில் வரலாற்றைப் படிக்க ஆரம்பித்து, வரலாற்றுப் புத்தகங்களின் தாக்கம் என்னுள் பலமாக இறங்கிவிட்டது. சமீபகாலமாக எனக்கு கடல்வழி பயணப் புத்தகங்களின் மீது ஆர்வம் அதிகரித்துள்ளது. இது எனக்கும் புத்தகத்துக்குமான இணைப்பு.
புத்தகத்தில் ஓவியத்தின் பங்கு என்பது கண்ணுக்கும், பார்வைக்கும் உள்ள பங்காகும். பார்வை இன்றி கண்ணிருந்து பயனில்லை. கண் இல்லாமல் பார்வையும் இல்லை. ஒரு விஷயத்தைப் படித்து புரிந்து கொள்ள மொழி உதவுகிறது. அதே விஷயத்தைப் பார்த்துப் புரிந்து கொள்ள ஓவியம் உதவுகிறது.
எழுத்தாளரின் கற்பனைக்கு உருவம் கொடுப்பது ஓவியமே. உதாரணமாக, கல்கியின் 'பொன்னியின் செல்வன்' கதையில் மணியன் செல்வத்தின் சித்திரங்கள் பேசவில்லையென்றால் அது இவ்வளவு பேரை போய் சேர்ந்திருக்குமா? என்பது சந்தேகம்தான்.
எவ்வளவு வார்த்தைகள் இருந்தாலும் சரி, எழுத்தாளரையும், வாசகரையும் இணைக்கும் படிமம் ஓவியம். ஆரம்ப காலத்தில் விளக்கப்படமாக இருந்த ஓவியம், படிப்படியாக வளர்ந்து புகைப்படம், சினிமா , அனிமேஷன் என தன்னை உருமாற்றிக்கொண்டு வளர்த்து வருகிறது. வளர்ந்த நாடுகளை பொருத்தவரையில் படிமம் மூலமாக படித்த சமூகம்தான் வளர்ந்த சமூகமாக காணப்படுகிறது. 
என்னைப் பொருத்தவரையில் வருங்காலங்களில் புதினங்கள் கூட காட்சிப் படிமமாக இருந்தால்தான் மக்களைப் போய் சேரும். ஒரே சமயத்தில் 150 மொழிகளில் கூட அந்தப் புதினத்தை மாற்றிக் கொடுக்கும் தன்மையை நவீன சாதனங்கள் ஏற்படுத்திக் கொடுக்கின்றன. மொழிப் புரியாத விஷயத்தையும் ஓவியம் புரிய வைத்துவிடும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

SCROLL FOR NEXT