முதியவர் வெட்டிக் கொலை
சென்னை திரு.வி.க.நகரில் முதியவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
சென்னை திரு.வி.க.நகரில் முதியவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
புளியந்தோப்பு நரசிம்ம நகர் 3-ஆவது தெருவை சேர்ந்தவர் ராதா (63), மனைவி கற்பகம் மகன் சம்பத், சட்டக் கல்லூரி மாணவர். ராதா மண்ணெண்ணெய் வியாபாரி.
திரு.வி.க.நகர் 3-ஆவது தெரு சந்திப்பில் உள்ள ஒரு கடைக்கு ராதா செவ்வாய்க்கிழமை காலை டீ குடிக்க வந்தார். அங்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஒரு கும்பல், ராதாவை வழிமறித்துத் தகராறு செய்தது.
தகராறு முற்றவே அந்தக் கும்பல், ராதாவை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியது. இதில் பலத்த காயமடைந்த ராதா, சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். புளியந்தோப்பு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.