சென்னை காவல் ஆணையரகத்தில் உலக சுற்றுச்சூழல் தினம்
சென்னை வேப்பேரியில் உள்ள பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உலக சுற்றுச்சூழல் தின நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சென்னை வேப்பேரியில் உள்ள பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உலக சுற்றுச்சூழல் தின நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியையொட்டி, காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன், ஆணையர் அலுவலக வளாகத்தில் மரக்கன்று நட்டார். இதையடுத்து ஆணையர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்ச்சியில், காவல்துறை சார்பில் கடந்தாண்டு சென்னை முழுவதும் 28,004 மரக்கன்றுகள் நடப்பட்டிருப்பதாக காவல் ஆணையர் விசுவநாதன் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் கூடுதல் காவல் ஆணையர்கள் எஸ்.என்.சேஷசாய், எம்.சி.சாரங்கன், இணை ஆணையர் ஆர்.சுதாகர், துணை ஆணையர் ஆர்.திருநாவுக்கரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.