சென்னை

மக்களுக்காகப் போராடுபவர்களை கைது செய்வது கண்டனத்துக்குரியது

DIN

மக்களின் பிரச்னைகளுக்காகப் போராடுபவர்களை தீவிரவாதிகளைப் போல் சித்திரிப்பதும், அவர்களை கைது செய்வதும் மிகவும் கண்டனத்துக்குரியது என சமூக ஆர்வலர் மேதா பட்கர் தெரிவித்தார்.
துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூற, தூத்துக்குடி சென்ற சமூக ஆர்வலர் மேதா பட்கர் செவ்வாய்க்கிழமை சென்னை வந்தார். அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழகத்தில் நீர், நிலம் மாசு அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் சென்னையில் உள்ள கூவம், அடையாறு உள்ளிட்ட கரையோரங்களில் நீண்ட காலமாக வாழ்ந்து வந்த மக்கள் தற்போது, அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
அனைவரும் மாநகர்ப் பகுதிகளில் வேலை செய்து வந்த நிலையில், அவர்களுக்கு 40 கிலோமீட்டருக்கு அப்பால் வீடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால், வேலையின்றி அவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வேலைக்கு வந்து செல்ல நாள்தோறும் பேருந்துக் கட்டணத்துக்குச் செலவழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு சென்னை மாநகர் பகுதியிலேயே அவர்களுக்கு வீடுகள் கட்டித் தர தமிழக அரசு முன்வர வேண்டும்.
மக்களுக்காகப் போராடுபவர்களை கைது செய்வதும், அவர்கள் மீது குண்டர் சட்டம் போடுவதும் கண்டிக்கத்தக்கது என்றார் மேதா பட்கர். பேட்டியின்போது, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

மாமனாரைத் தாக்கிய மருமகன் கைது

ஆயுதப்படை போலீஸாருக்கு தியானம், நினைவாற்றல் பயிற்சி

மீண்டும் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

SCROLL FOR NEXT