சென்னை

மனைவி கொலை: கணவர் கைது

தினமணி

சென்னை பள்ளிக்கரணையில் குடிபோதையில் மனைவியை கொலை செய்து, மகனையும் கத்தியால் குத்தியவர் கைது செய்யப்பட்டார்.
 இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
 பள்ளிக்கரணை பாரதிதாசன் 1-ஆவது தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (48). இவரது மனைவி ஜோஸ்மின் மேரி (எ) மகாலட்சுமி (42). இவர்கள் இருவரும் காதலித்து 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டவர்கள் ஆவர். இத்தம்பதிக்கு குணால் (19), திரிஷ் (17) என இரு மகன்கள் உள்ளனர். கிருஷ்ணமூர்த்தி, வேளச்சேரியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
 கிருஷ்ணமூர்த்திக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி வெள்ளிக்கிழமை இரவு கடும் மதுபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். இதைப் பார்த்த மகாலட்சுமி, தனது கணவரைக் கண்டித்துள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு, தகராறு முற்றவே, மகாலட்சுமி தனது அறைக்கு தூங்கச் சென்றுள்ளார்.
 இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை கிருஷ்ணமூர்த்தி, சமையலறையில் காய்கறி வெட்ட பயன்படுத்தும் கத்தியால், தூங்கிக் கொண்டிருந்த மகாலட்சுமியை குத்தியுள்ளார். கிருஷ்ணமூர்த்தியிடம் தப்பிப்பதற்கு மகாலட்சுமி சத்தம் போட்டபோது, தூக்கத்தில் இருந்து எழுந்த மகன் திரிஷ், தனது தாயைக் காப்பாற்ற முயன்றுள்ளார்.
 அப்போது கிருஷ்ணமூர்த்தி, தனது மகன் திரிஷையும் கத்தியால் தாக்கியுள்ளார். இதற்கிடையே கிருஷ்ணமூர்த்தி வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். இதைப் பார்த்த கிருஷ்ணமூர்த்தி, அங்கிருந்து தப்பியோடினார்.
 உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மகாலட்சுமியையும், மகன் திரிஷையும் அங்கிருந்தவர்கள் மீட்டு அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அங்கு மகாலட்சுமி ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். திரிஷுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே தப்பியோடிய கிருஷ்ணமூர்த்தி பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT