சென்னை

தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் பொறுப்பு மாணவர்களிடம் உள்ளது: கமல்ஹாசன்

DIN


தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் பொறுப்பு மாணவர்களிடம் உள்ளது என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.
சென்னை மேற்கு தாம்பரம், ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்ற விழாவில், ரெளத்திரம் செல்லிடப்பேசி செயலி சேவையைத் தொடங்கி வைத்து, அவர் மேலும் பேசியபோது, ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மாணவர்கள் காட்டிய கண்ணியத்தை என்றும் மறக்க முடியாது. 
ஜல்லிக்கட்டு போல பல உதாரணங்களுக்குக் காரணமாக நீங்கள் இருக்க வேண்டும். அதற்கான நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் புதிய மாற்றத்திற்கான புரட்சியில் நீங்கள் பங்கேற்க வேண்டும் என்றார் அவர். 
பின்னர் மாணவர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு கமல்ஹாசன் பதில் அளித்து பேசியது: தோல்வியைத் தழுவியவர்கள் தான் சாதனை படைத்துள்ளனர். தோல்வி மூலம் பெறும் அனுபவம், எதை நாம் செய்யக்கூடாது என்பதைக் கற்றுத் தரும். தோல்வி இல்லாமல் வெற்றி அடைய முடியாது. குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லாதபோது குரல் எழுப்பலாம். ஆதாரம் இல்லாமல் பொய் குற்றச்சாட்டு சொல்பவர்களும் இங்கு இருக்கிறார்கள். பெண்களின் பாதுகாப்பற்ற நிலைக்கு ஆண்கள் காரணம். வீட்டில் அவர்கள் வளர்க்கப்படும் முறையும் ஒரு காரணம். 
இந்திய அரசியலில் பெண்களின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. அது இன்னும் அதிகரிக்கப்பட வேண்டும். நான் மாணவர்களைத் தேடிச் செல்வதை சிலர் கிண்டல் செய்கின்றனர். அரசியல் ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்டதாக உள்ளதால் நமக்கு அதுகுறித்த தெளிவான சிந்தனை அவசியமாகும். தமிழகத்தில் மாற்றத்தை உருவாக்கும் பொறுப்பு மாணவர்களிடம் உள்ளது. அத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த உங்களை நாடி வந்துள்ளேன் என கமல்ஹாசன் கூறினார்.
பின்னர், விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் நடைபெற்ற விவசாயிகள் சந்திப்பு நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா்த் தொட்டியை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

பூமாரியம்மன் கோயில் பூக்குழித் திருவிழா

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை

சரக்கு வாகனம் மோதியதில் ராணுவ வீரா் பலி

பெருநகரங்களில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்து வருவது குறித்து கள ஆய்வு நடத்த வேண்டும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அறிவுறுத்தியிருப்பது சரியா என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

SCROLL FOR NEXT