சென்னை

காவல் உதவி ஆய்வாளர்கள் பயிற்சி நிறைவு

DIN


காஞ்சிபுரம் மாவட்டம் ஊனமாஞ்சேரியில் தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் காவல் உதவி ஆய்வாளர்களுக்கான பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பில் கடந்தாண்டு தேர்வு செய்யப்பட்ட 75 பெண்கள் 228 தொழில்நுட்பப் பிரிவு காவல் உதவி ஆய்வாளர்கள், 60 பெண்கள் உள்பட 228  விரல்ரேகைப் பிரிவு காவல் உதவி ஆய்வாளர்கள் ஆகியோருக்கு காஞ்சிபுரம் மாவட்டம், ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் கடந்த 25 வாரங்களாக பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வந்தன.
குறிப்பாக தொழில்நுட்பப் பிரிவு காவல் உதவி ஆய்வாளர்களுக்கு தொழில்நுட்பப் பாடங்கள், பணி ஒழுக்க நடத்தைகள், மென்பொருள் தற்கால வளர்ச்சி முறைகள், சைபர் குற்றங்கள், மேலாண்மை பயிற்சிகள், குற்றம் சார்ந்த சட்டங்கள் ஆகிய பாடங்கள் கற்பிக்கப்பட்டு, பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
இதேபோல, விரல் ரேகை பிரிவு காவல் உதவி ஆய்வாளர்களுக்கு கைரேகை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது, குற்றம் நடைபெறும் இடங்களில் குற்றவாளிகளின் விரல் ரேகையைக் கண்டறிந்து, பதிவு செய்வது உள்ளிட்ட பல்வேறு பாடங்கள் கற்பிக்கப்பட்டு, பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
இந்த பயிற்சிகள் நிறைவடைந்ததையொட்டி, வெள்ளிக்கிழமை அங்கு நிறைவு விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு தமிழக காவல்துறையின் பயிற்சிப் பிரிவு டிஜிபி கரன்சின்ஹா தலைமை வகித்தார். ரயில்வே டிஜிபி சி.சைலேந்திரபாபு, லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி பங்கேற்று, பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பிடித்த காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கி, வாழ்த்தி பேசினார்.
முன்னதாக, தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தின் காவல் கண்காணிப்பாளர் எஸ்.சாந்தி வரவேற்று பேசினார். ஏடிஜிபி அம்ரேஷ் பூஜாரி, பயிற்சி உதவி காவல் ஆய்வாளர்களுக்கு அளிக்கப்பட்ட பயிற்சிகள் குறித்து விளக்கி பேசினார்.  இந் நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகள் திரளாக பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் தொண்டை வலி, இருமலுடன் காய்ச்சல்: சீசன் நோயாக மாறியதா கரோனா?

பாலியல் புகாரில் சிக்கியவர்கள் மீது நடவடிக்கை: எச்டி குமாரசாமி உறுதி

அஜித் படத்தில் சிம்ரன், மீனா?

மரத்தில் கார் மோதி விபத்து: தாயுடன் மகன் பலி

கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!

SCROLL FOR NEXT