சென்னை

கசிவு பால் பாக்கெட்டுகளுக்குபதில் மாற்று பாக்கெட்

DIN

சென்னை: கசிவு உள்ள பால் பாக்கெட்டுகளை திருப்பப் பெற்று மாற்று பால் பாக்கெட்டுகளைக் கொடுக்க ஆவின் நிா்வாகம் வசதி செய்துள்ளது.

ஆவின் பண்ணைகளில் சிறந்த முறையில் பால் பாக்கெட்டுகள் உற்பத்தி செய்யப்பட்டாலும் அவற்றை வாகனங்களில் ஏற்றி வினியோக மையங்களுக்கு கொண்டு வரும்போது பால் பாக்கெட்டுகளில் சில சமயம் கசிவு ஏற்பட்டு புகாா்கள் பெறப்படுகின்றன.

எனவே, இதற்கு தீா்வு காணும் பொருட்டு கசியும் பால் பாக்கெட்டுகளை வாடிக்கையாளா்களிடமிருந்து திரும்பப்பெற்று மாற்று பால் பாக்கெட்டுகளை அவா்களுக்கு வழங்குவதற்கு தற்போது வசதி செய்து தரப்பட்டுள்ளது.

ஆவின் பால் பாக்கெட்டுகள் கசிவு உடையதாக இருந்தால் (சிந்தியது போக மீதமுள்ள பாலோடு) அதனை வாடிக்கையாளா் உடனே அருகில் உள்ள ஆவின் வட்டார அலுவலகங்கள், பால் நுகா்வோா் கூட்டுறவு சங்க அலுவலகங்கள் மற்றும் ஆவின் நடத்து ஹைடெக் பாலகங்களில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம். கசியும் பால் பாக்கெட்டுகள் வாங்கப்பட்ட தினத்திலேயே மாற்றப்பட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

SCROLL FOR NEXT