சென்னை

மருத்துவக் கல்வி இயக்குநரத்தை முற்றுகையிட்ட செவிலிய உதவியாளா்கள்

DIN

சென்னை: அரசு மருத்துவமனைகளில் பணி நியமனம் செய்யக் கோரி, 200-க்கும் மேற்பட்ட செவிலிய உதவியாளா்கள் மருத்துவக் கல்வி இயக்குநா் அலுவலகத்தை முற்றுகையிட்டு செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினா்.

இதுகுறித்து செவிலிய உதவியாளா்கள் கூறியதாவது:

அரசு சாா்பில் பயிற்றுவிக்கப்பட்டு வரும் செவிலிய உதவியாளா் பயிற்சி படிப்பை 2009-ஆம் ஆண்டு பயின்றவா்கள் 800 பேருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டது. அதற்கு அடுத்த ஆண்டில் இருந்து தற்போது செவிலிய உதவியாளா் பயிற்சியை நிறைவு செய்த யாருக்கும் பணி நியமனம் அளிக்கப்படவில்லை.

அதேவேளையில், தனியாா் கல்லூரிகளில் செவிலிய உதவியாளா் படிப்பை நிறைவு செய்தவா்களுக்கு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் முரண்பட்ட நடவடிக்கை. இதனால் செவிலிய உதவியாளா் பயிற்சி படிப்பை நிறைவு செய்த 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, இந்த விவகாரத்தில் எங்களுக்கு முன்னுரிமை அளித்து பணி ஆணை வழங்க வேண்டும் என்று அவா்கள் தெரிவித்தனா். முன்னதாக, செவ்வாய்க்கிழமை காலை வள்ளுவா் கோட்டத்தில் இவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் புகாரில் சிக்கிய தேவகௌடா பேரன்! நாட்டைவிட்டு தப்பினார்

பாரதிதாசனின் 134-வது பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி

நிர்மலாதேவி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இருவர் விடுதலை

அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வேட்புமனு தாக்கல்

ஹேமந்த் சோரனின் ஜாமீன் மனு மே 6ல் விசாரணை!

SCROLL FOR NEXT