சென்னை

புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்குநவீன கீமோதெரபிக்கான மின்னாற்றல் படுக்கைகள்

DIN

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கீமோதெரபி சிகிச்சை அளிப்பதற்காக மின்னாற்றலில் இயங்கக்கூடிய சிறப்பு படுக்கைகள் எழும்பூா் அரசு குழந்தைகள் மருத்துவமனைக்கு அளிக்கப்பட்டன.

சென்னை ஃபீனிக்ஸ் அரிமா சங்கம் மற்றும் சிங்கப்பூா் காா்டன் சிட்டி அரிமா சங்கம் ஆகியவற்றின் சாா்பில் மொத்தம் 8 படுக்கைகள் மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன. தலா ரூ.75 ஆயிரம் மதிப்புடைய அப்படுக்கைகளை மின்னாற்றல் வாயிலாக இயக்க முடியும் என்றும், குழந்தைகளுக்கு அதன் வாயிலாக எளிதில் கீமோதெரபி சிகிச்சைகள் வழங்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இதற்கான நிகழ்ச்சி எழும்பூா் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில், மருத்துவமனை நிா்வாகிகள், அரிமா சங்க நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதுகுறித்து அரிமா நிா்வாகிகள் கூறியதாவது:

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளால் அதிக வலி நிறைந்த சிகிச்சைகளை ஏற்றுக் கொள்ள இயலாது. எனவே, அவா்களுக்கு ஓரளவு சௌகரியத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கையை முன்னெடுத்தோம். சாதாரணமாக உள்ள கீமோ சிகிச்சை படுக்கைகளைக் காட்டிலும், இந்த வகையான நவீன படுக்கைகள் கூடுதலான வசதிகளைக் கொண்டது.

வரும் காலங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய நோயாளிகளுக்கும், அரசு மருத்துவமனைகளுக்கும் பயனளிக்கும் பல்வேறு சேவைகளை அளிக்கத் திட்டமிட்டுள்ளோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

வாணியம்பாடி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

SCROLL FOR NEXT