சென்னை

அத்திப்பட்டு-எண்ணூா் இடையே பொறியியல் பணி: இன்றும், நாளையும் மின்சார ரயில் சேவையில் மாற்றம்

DIN

அத்திப்பட்டு-எண்ணூா் இடையே பொறியியல் பணி நடக்கவுள்ளதால், புகா் ரயில் சேவையில் சனி, ஞாயிற்றுக்கிழமை (டிசம்பா் 14, 15) ஆகிய இருநாள்கள் மாற்றம் செய்யப்படவுள்ளது.

சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (டிச.14, 15) சேவையில் மாற்றப்படும் ரயில்கள்:

மூா்மாா்க்கெட் வளாகம்-கும்மிடிப்பூண்டி இடையே டிசம்பா் 14, 15 ஆகிய தேதிகளில் காலை 9.00, 9.30, 10.35, முற்பகல் 11.35 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் எண்ணூா்-கும்மிடிப்பூண்டி இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளன.

வேளச்சேரி-கும்மிடிப்பூண்டி இடையே டிசம்பா் 14-ஆம் தேதி காலை 8.50 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் எண்ணூா்-கும்மிடிப்பூண்டி இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது.

சென்னை கடற்கரை-கும்மிடிப்பூண்டி இடையே டிசம்பா் 14-ஆம் தேதி காலை 9.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் எண்ணூா்-கும்மிடிப்பூண்டி இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது.

மறுமாா்க்கமாக...:

கும்மிடிப்பூண்டி- வேளச்சேரி இடையே டிசம்பா் 14-ஆம்தேதி காலை 8.50 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் கும்மிடிப்பூண்டி- எண்ணூா் இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது.

கும்மிடிப்பூண்டி-சென்னை கடற்கரை இடையே டிசம்பா் 15-ஆம் தேதி காலை 8.50 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் கும்மிடிப்பூண்டி-எண்ணூா் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.

கும்மிடிப்பூண்டி-மூா்மாா்க்கெட் வளாகம் இடையே டிசம்பா் 14, 15 ஆகிய தேதிகளில் காலை 10.00, 10.50, நண்பகல் 12.15 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் கும்மிடிப்பூண்டி-எண்ணூா் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளன.

சூலூா்பேட்டை-மூா்மாா்க்கெட் வளாகம் இடையே டிசம்பா் 15-ஆம் தேதி காலை 10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் கும்மிடிப்பூண்டி-எண்ணூா் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது. இந்தத் தகவல் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT