சென்னை

அங்கீகாரம் இல்லாத 366 பள்ளிகளுக்கு நோட்டீஸ்

DIN

தமிழகத்தில் அங்கீகாரம் பெறாத 366 தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அப்பள்ளிகள் வரும் மே மாதத்துக்குள் முறையான அங்கீகாரம் பெறத் தவறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 
தனியார் பள்ளிகள் சுகாதாரம்,  குடிநீர்,  கழிவறை,  தீத்தடுப்பு,  விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் தொடர்பான சான்றுகளை  பள்ளிக் கல்வித்துறையிடம் வழங்கி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை அங்கீகாரத்தைப் புதுப்பிக்க விண்ணப்பிக்க வேண்டும்.  இந்தநிலையில் முதல் முறை அங்கீகாரமே பெறாமல் 366  தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித்துறையின் ஆய்வில் தெரியவந்தது. 
இதையடுத்து அதில் படிக்கும் மாணவர்களின் நலனைக் கருதி அந்தப் பள்ளிகள் அங்கீகாரம் பெற வரும் மே மாதம் வரை வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.  அவகாசம் முடிவடைந்தும் போதிய சான்றிதழ்களை சமர்ப்பிக்காவிட்டால் அந்தப் பள்ளிகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.  பள்ளிகளுக்குரிய நோட்டீûஸ அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் வழங்கியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'ரசிகனிலிருந்து இயக்குநர் வரை..’: ஆதிக் ரவிச்சந்திரன் நெகிழ்ச்சி

ஜி.எஸ்.டி. வசூல் புதிய உச்சம்!

குஷி ஜோ!

கூலி - இளையராஜா நோட்டீஸ்!

குடியரசுத் தலைவரின் முதல் வருகை! முழுவீச்சில் தயாராகும் அயோத்தி ராமர் கோவில்!

SCROLL FOR NEXT