சென்னை

காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்கக் கோரி மாநாடு: அனுமதியளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

DIN


நாகை மாவட்டத்தில் காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தி மாநாடு நடத்த அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் மாநாட்டுக்கு அனுமதியளிக்க போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளது. 
சென்னை உயர் நீதிமன்றத்தில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் தாக்கல் செய்த மனுவில், மத்திய மாநில அரசுகள் காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தி, நாகப்பட்டினம் மாவட்டம் திருவிழந்தூரில் ஒருநாள் மாநாடு நடத்த திட்டமிட்டோம். இந்த மாநாட்டுக்கு அனுமதி கோரி மயிலாடுதுறை காவல் நிலைய ஆய்வாளரிடம் மனு அளித்தோம். 
இந்த மனுவை போலீஸார் நிராகரித்து விட்டனர். எனவே மாநாட்டுக்கு அனுமதி கோரி அளிக்கப்பட்ட மனுவை பரிசீலித்து அனுமதியளிக்க போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், மனுதாரர் மீது 24 வழக்குகள் உள்ளதால் மாநாடு நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், மாநாட்டுக்கு அனுமதி அளிக்க போலீஸாருக்கு உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல் பிரசாரத்தில் சிறுமி: பிடிபி தலைவா் மெஹபூபா முஃப்திக்கு நோட்டீஸ்

ம.பி.: பாஜகவில் இணைந்த 3-ஆவது காங்கிரஸ் எம்எல்ஏ

அரக்கோணம் ஸ்ரீ தா்மராஜா கோயில் தீமிதி விழா

திருவண்ணாமலை ரயிலில் அலைமோதும் கூட்டம்: கூடுதல் ரயில் இயக்க பயணிகள் கோரிக்கை

சீதா கல்யாண மகோற்சவம்: ஸ்ரீ விஜயேந்திரா் அருளாசி

SCROLL FOR NEXT