சென்னை

மெட்ரோ ரயிலில் விரைவில் வைஃபை வசதி

DIN


சென்னை மெட்ரோ ரயிலில் பயணிகள் வசதிக்காக  வைஃபை வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வண்ணாரப்பேட்டை-ஏ.ஜி.  டி.எம்.எஸ். இடையே புதிய வழித்தடத்தில் கடந்த 10-ஆம் தேதி மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. இதையடுத்து, 45 கி.மீ. தூரத்துக்கான சென்னை மெட்ரோ முதல் கட்ட ரயில் திட்டம் முழுமையடைந்தது. வண்ணாரப்பேட்டை-விமானநிலையம் வரையிலான முதல் வழித்தடத்திலும்,  சென்ட்ரல்-பரங்கிமலை வரையிலான இரண்டாம் வழித்தடத்திலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. முதல் கட்ட சேவை முழுமையடைந்த பிறகு, மெட்ரோ ரயில்களில் தற்போது தினசரி 90 ஆயிரம் முதல் ஒரு லட்சம் பேர் பயணம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், மெட்ரோ ரயிலில் வைஃபை வசதியும், ரயில் செல்லும் வழித்தடத்தைக் காட்சிப்படுத்த  டிஜிட்டல் வரைபடமும் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக மெட்ரோ ரயில் திட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பையில் இடம்பெற கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன் போட்டி; கிரீம் ஸ்மித் கூறுவதென்ன?

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

மிஸ்டர் மனைவி நாயகிக்கு பதிலாக வானத்தைப்போல நடிகை!

வானம் வேறு.. நீலம் வேறு.. யார் சொன்னது?

தலைமுறைகள் கடந்த தலைவர்களின் வாழ்க்கை!

SCROLL FOR NEXT