முகப்பு
சென்னை

நாளை குரூப்-1 தேர்வுக்கான  இலவச வழிகாட்டும் முகாம்

குரூப் 1 தேர்வுக்கான இலவச வழிகாட்டும் முகாம் சென்னை அண்ணாநகர் திருமங்கலத்தில் செயல்பட்டு வரும் ஃபோக்கஸ் அகாதெமியில் புதன்கிழமை நடைபெறவுள்ளது.

Updated On : 26 பிப்ரவரி 2019, 4:14 am IST
பகிர்:


குரூப் 1 தேர்வுக்கான இலவச வழிகாட்டும் முகாம் சென்னை அண்ணாநகர் திருமங்கலத்தில் செயல்பட்டு வரும் ஃபோக்கஸ் அகாதெமியில் புதன்கிழமை நடைபெறவுள்ளது.
இது குறித்து அந்த அகாதெமியின் இயக்குநர் மு.சிபிகுமரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  துணை ஆட்சியர்,  காவல் துணைக் கண்காணிப்பாளர்,  கூட்டுறவு துணைப் பதிவாளர் போன்ற பணிகள் அடங்கிய சுமார் 170 குரூப்- 1 பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு வரும் மார்ச் 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது. 
இந்தத் தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் படிக்க வேண்டிய பாடப் புத்தகங்கள்,  நேர மேலாண்மை மற்றும் திட்டமிடுதல் குறித்து வழிகாட்டும் முகாமில் விளக்கம் அளிக்கப்படும்.  தேர்வர்களுக்கு பாடக்குறிப்புகள் வழங்கப்படுவதோடு மாதிரித் தேர்வும் நடைபெறும்.  முழுமையான நடப்பு நிகழ்வுகள் தேர்வர்களுக்கு வழங்கப்படும். தேர்வுக்குத் திட்டமிடுதல்,  நேர மேலாண்மை போன்ற சந்தேகங்களுக்கு பதிலளிக்கப்படும்.
இதில் அரசுத் துறை உயரதிகாரிகள்,  துறை வல்லுநர்கள் கலந்துகொண்டு தேர்வுகள் தொடர்பாக வழிகாட்டுவார்கள்.  பயிற்சியில் கலந்து கொள்ள கட்டணம் ஏதுமில்லை. 
தகுதியுள்ள மாணவர்கள் தங்களது சுயவிவரங்களுடன் திருமங்கலத்தில் செயல்பட்டு வரும் ஃபோக்கஸ் அகாதெமியில் நேரில் வந்து முன்பதிவு செய்து கொள்ளலாம்.  மேலும் விவரங்களுக்கு 70101 36605, 82489 51454 என்ற செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அதில் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.