சென்னை

அண்ணலின் அடிச்சுவட்டில் நிறைவு விழா

DIN


அண்ணலின் அடிச்சுவட்டில் காந்திய பயணத்தின் நிறைவு விழா தி.நகர் தக்கர் பாபா அரங்கில் வியாழக்கிழமை (இன்று) காலை நடைபெற இருக்கிறது. 
தினமணி நாளிதழும் மதுரை காந்தி அருங்காட்சியகமும் மாணவ - மாணவியருக்காக இணைந்து அண்ணல் காந்தியடிகளின் 150-ஆவது பிறந்த ஆண்டையொட்டி கட்டுரைப் போட்டி நடத்தியது. போட்டிக்கு வந்த 2,000-க்கும் அதிகமான கட்டுரைகளில் 50 கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற 50 மாணவ - மாணவியரும் கடந்த ஜனவரி 11-ஆம் தேதி மதுரை காந்தி அருங்காட்சியத்தில் குவிந்தனர். அங்கிருந்து தமிழகத்தில் காந்தியடிகள் விஜயம் செய்த இடங்களுக்கு, வெற்றி பெற்ற மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். அண்ணலின் அடிச்சுவட்டில் என்கிற அந்தப் பயணம் இன்று சென்னையில் நிறைவு பெறுகிறது.
தமிழகத்தில் அண்ணல் காந்தியடிகள் விஜயம் செய்த இடங்களை தரிசித்த மாணவர்கள், காலை 9 மணிக்கு ஆளுநர் மாளிகையில் ஆளுநருடன் கலந்துரையாடுகிறார்கள். ஆளுநர் மாளிகையிலிருந்து கிண்டி காந்தி மண்டபத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு அண்ணலின் அடிச்சுவட்டில் பயணக்குழுவினர் தி.நகர் வெங்கட்நாராயணா சாலையிலுள்ள தக்கர்பாபா அரங்கில் குழுமுகிறார்கள். காலை 11 மணி முதல் கருத்தரங்கு நடைபெறவுள்ளது. 
தினமணி நாளிதழ் சார்பில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு சிறப்பு செய்யப்படுவதுடன் வாழ்த்து மடலும் நினைவுப் பரிசும் வழங்கப்படுகிறது. கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதனின் தலைமையில் நடைபெற இருக்கும் கருத்தரங்கில் லட்சுமிகாந்தன் ஐஏஎஸ் (ஓய்வு), முனைவர் அ. பிச்சை, வழக்குரைஞர் டி.எஸ்.ஆர். வேங்கடரமணா உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் காந்திய அன்பர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சியாமளாதேவி அம்மன் கோயில் கட்டுமானப் பணிகள் தீவிரம்

அா்ஜுனன் தபசு மரம் ஏறும் விழா

கேரளம்: கடும் வெயிலால் இருவா் உயிரிழப்பு

கோடை வெப்பத்தை சமாளிக்க நடவடிக்கைகள்: ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு

இறுதிக்கு வந்தது மோகன் பகான்

SCROLL FOR NEXT