சென்னை

சரும பாதுகாப்பு: 11,000 கி.மீ.,கடந்து வந்த விழிப்புணர்வு வாகனம்

DIN


தில்லியில் இருந்து புறப்பட்ட சரும நோய் விழிப்புணர்வு வாகனம் 11 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவை கடந்து சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை வந்தது. 
அதனை மருத்துவமனை முதல்வர் டாக்டர் ஜெயந்தி, கண்காணிப்பாளர் டாக்டர் நாராயணசாமி உள்ளிட்டோர் வரவேற்றனர்.
கடந்த மாதம் 21-ஆம் தேதி அந்த விழிப்புணர்வு வாகனம் தில்லியில் இருந்து புறப்பட்டது. பல்வேறு மாநிலங்களைக் கடந்து செவ்வாய்க்கிழமை சென்னை வந்தடைந்தது. ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், அதற்கான சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
சரும பாதுகாப்பு மற்றும் நோய்கள் தொடர்பான விழிப்புணர்வு குறித்து அப்போது எடுத்துரைக்கப்பட்டது. மேலும், அதுகுறித்த துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து சரும நலன் குறித்த காணொலி காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன. இந்திய தோல், பால்வினை நோய் மற்றும் தொழுநோய் சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தில் (ஐஏடிவிஎல்) சார்பில் இந்த விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

SCROLL FOR NEXT