சென்னை

முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு கணினி வழி தேர்வு : விண்ணப்பிக்க இன்று கடைசி

அரசுப் பள்ளிகளில் பல்வேறு பாடங்களில் காலியாக உள்ள 2,144 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க திங்கள்கிழமை கடைசி நாளாகும்.

DIN

அரசுப் பள்ளிகளில் பல்வேறு பாடங்களில் காலியாக உள்ள 2,144 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க திங்கள்கிழமை கடைசி நாளாகும்.
அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 பாடம் எடுக்கும் முதுநிலை ஆசிரியர்களுக்கான காலியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி. சார்பில் கணினி வழி போட்டித் தேர்வு அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்வில் பங்கேற்கத் தகுதியானவர்கள், கடந்த ஜூன் 24-ஆம் தேதி முதல் ஆன்லைனில் http://trb.tn.nic.in என்ற இணையதளத்தின் வழியே விண்ணப்பித்து வருகின்றனர். இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க திங்கள்கிழமை (ஜூலை 15) கடைசி நாளாகும்.
தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. 
இந்தத் தேர்வின் வழியாக, 16 உடற்கல்விஆசிரியர்கள் உள்பட மொத்தம் 2144 முதுநிலை ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழ், வரலாறு, பொருளியல், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், தாவரவியல், மைக்ரோ பயாலஜி, உடற்கல்வி உட்பட 17 வகையான பாடங்களுக்கு காலியிட பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. பாட வாரியாகவும், பிரிவுவாரியாகவும் உள்ள காலியிடங்களின் எண்ணிக்கை, கல்வி தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சேம்பள்ளி செல்வபெருமாள் கோயில் கும்பாபிஷேகம்!

சிவகங்கையில் டிச. 20-இல் தனியாா்த் துறை வேலைவாய்ப்பு முகாம்

பள்ளி திறப்பு விழா - செயற்கை நுண்ணறிவு ஆசிரியா் அறிமுகம்!

வத்தலகுண்டு பேரூராட்சிக் கடைகள் ஏலத்தில் முறைகேடு: ஆட்சியரிடம் அதிமுகவினா் புகாா்

கோரிக்கை மனு எழுத பொதுமக்களிடம் ரூ. 100 வசூல்: காவல் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT