சென்னை

தேசிய தரவரிசையில் சென்னைப் பல்கலை. முன்னேற்றம்

DIN

தேசிய தரவரிசையில் 2 ஆண்டுகளுக்கு முன் 41-ஆவது இடத்தில் இருந்த சென்னைப் பல்கலைக்கழகம் தற்போது முதல் 20 இடங்களுக்குள் முன்னேறியிருப்பதாக துணைவேந்தர் துரைசாமி தெரிவித்துள்ளார்.
 மேலும் அவர் கூறுகையில், ''பல்கலைக்கழகத்தில் தொழில்முனைவோர் மற்றும் சுய வேலைவாய்ப்பு பயிற்சி மண்டலம் அமைக்க மத்திய அரசிடம் ரூ. 15 கோடி நிதி கோரப்பட்டுள்ளது. முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களின் சிறப்பான செயல்பாட்டுக்காக, பிழைகளைக் கண்டறிதல் மற்றும் உண்மைத்தன்மை பரிசோதிக்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் 50 சதவீத பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், பல்கலைக்கழக மானியக்குழு உள்ளிட்ட அமைப்புகளிடம் நிதி பெறுவதில் சிக்கல் நிலவுகிறது. தமிழக அரசுடன் ஆலோசித்து பேராசிரியர்கள் நியமனம் மற்றும் நிதிப்பற்றாக்குறைக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார் அவர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT