சென்னை

குளிர்பானத்தில் சாக்லெட் கவர்: தனியார் நிறுவனத்துக்கு ரூ.35 ஆயிரம் அபராதம்

DIN


குளிர்பானத்தில் சாக்லெட் கவர் இருந்த விவகாரத்தில் தனியார் நிறுவனத்துக்கு ரூ. 35 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் குறைதீர் மன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை சேப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர் கடந்த 2011-ஆம் ஆண்டு ஹாரிஸ் சாலையில் உள்ள கடையில் குளிர்பானம்  வாங்கியுள்ளார். அதைக் குடிக்கும்போது, பாட்டிலுக்குள் சாக்லெட் கவர் இருந்தது. இதனால்,  அதிர்ச்சியடைந்த சக்திவேல் கடை உரிமையாளரிடம் கேட்டுள்ளார். இதுகுறித்து  தனக்கு ஏதும் தெரியாது என்று கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார். இதனால்,  மனஉளைச்சலுக்கு ஆளான சக்திவேல் தனியார் குளிர்பான நிறுவனத்தின் மீது சென்னை நுகர்வோர் குறைதீர்மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். 
ரூ. 35 ஆயிரம் அபராதம்: இந்த வழக்கு நீதிபதி மோனி, உறுப்பினர் பாஸ்கர் குமரவேல் முன்பு விசாரணைக்கு வந்தது.  விசாரணையில் குளிர்பானத்தில் சாக்லெட் கவர் கிடந்தது உறுதியானது. எனவே, பாதிக்கப்பட்ட சக்திவேலுக்கு குளிர்பான நிறுவனம்  ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரித்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

வணங்கான் வெளியீட்டு பணிகள் தீவிரம்!

தென்னிந்தியாவில் பாஜகவுக்கு வரவேற்பு; 100 தொகுதிகளில் வெல்லும்: அமித் ஷா

நத்தத்தில் திடீர் தீ விபத்து: ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்!

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

SCROLL FOR NEXT