சென்னை

"மகளிர் மணி'யின் நட்சத்திர சாதனையாளர் விருது: உலக மகளிர் தினமான இன்று சென்னையில் விழா

DIN

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு "தினமணி' "மகளிர் மணி' சார்பில் நட்சத்திர சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னையில் இன்று (மார்ச் 8) நடைபெற உள்ளது.

சென்னை வாலாஜா சாலையில் அமைந்துள்ள கலைவாணர் அரங்கில் இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறும் இந்த விழாவில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்று, விருதுகளை வழங்க உள்ளார். விழாவுக்கு "தினமணி' ஆசிரியர் கி.வைத்தியநாதன் தலைமையேற்கிறார்.

இந்த ஆண்டு முதல்... "தினமணி' சார்பில் மகாகவி பாரதியார் விருது வழங்கப்படுவது போல, "தினமணி'யின் இணைப்பான "மகளிர் மணி' சார்பில் உலக மகளிர் தினத்தன்று  சாதனை மகளிருக்கு விருது வழங்கி கௌரவிப்பது என தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

அதனடிப்படையில், தமிழ்த் திரையுலகில் 1950 முதல் 1970 வரையிலான காலகட்டத்தில் தங்களின் நடிப்பாற்றலால் மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்ற நடிகைகள் ஒன்பது பேருக்கு "சாதனை நட்சத்திரங்கள்' விருது வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

உலக மகளிர் தினமான இன்று  (மார்ச் 8) மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெற இருக்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகைகள் வைஜயந்தி மாலா,  சௌகார் ஜானகி,  ஜமுனா, சாரதா, காஞ்சனா, ராஜஸ்ரீ, கே.ஆர்.விஜயா,  வெண்ணிற ஆடை நிர்மலா,  சச்சு ஆகியோருக்கு விருது வழங்கப்பட உள்ளது.

நிகழ்ச்சியில், விருது பெறும் நட்சத்திரங்களின் சாதனைகளும் அவர்கள் குறித்த பதிவும் இடம் பெறும்.

அனுமதி இலவசம்: இந்த விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம். தங்கள் பெயர், தொடர்பு எண்ணுடன் 97909 80880 என்ற செல்லிடப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினால் நிகழ்ச்சியில் அவர்களுக்கான இருக்கை உறுதி செய்யப்படும். வாசகர்கள் இதையே அழைப்பாக எடுத்துக்கொண்டு நிகழ்ச்சியில் பங்கேற்க வரலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

SCROLL FOR NEXT